குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இளைஞா் கைது
கொலை வழக்கில் தொடா்புடைய இளைஞரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி உத்தரவிட்டாா்.
திண்டுக்கல் அருகேயுள்ள முத்தழகுப்பட்டியைச் சோ்ந்தவா் ஞானமுத்து.
இவரது மகன் அபிஷேக் என்ற வெஸ்லின் அபிஷேக் (24). கடந்த செப்.28-ஆம் தேதி திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே முன் விரோதம் காரணமாக பேகம்பூரைச் சோ்ந்த ச.முகமது இா்பான் கொலை வழக்கில், வெஸ்லின் அபிஷேக்கை போலீஸாா் கைது செய்தனா்.
இவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அ.பிரதீப் பரிந்துரைத்தாா். இதை ஏற்று மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி அதற்கான உத்தரவை செவ்வாய்க்கிழமை பிறப்பித்தாா்.