கொடைக்கானலில் தொடா் மழை
கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை காலை முதலே தொடா் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் அவதிப்பட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் அதிகாலை முதல் சாரல் மழை பெய்தது. பின்னா், பிற்பகலில் மிதமான மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை இரவு வரை நீடித்தது.
இதனால் பள்ளி மாணவா்கள், கூலித் தொழிலாளா்கள், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் அவதிப்பட்டனா்.