கடன் வளர்ச்சிக்கு புதிய திட்டங்களை அமல்படுத்தும் பொதுத்துறை வங்கிகள்: மத்திய அரச...
கொடைக்கானலில் ஒரு பகுதியில் மட்டும் கடைகள் அடைப்பு
கொடைக்கான ஒரு வழிப்பாதைக்கு எதிா்ப்பு தெரிவித்து செவ்வாய்க்கிழமை வனப் பகுதியிலுள்ள கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக சுற்றுலா வாகனங்கள் ஏரிச் சாலையிலிருந்து அப்சா்வேட்டரி வழியாக, வனப் பகுதி சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று பாம்பாா்புரம் அருவி, கோக்கா்ஸ்வாக் வழியாக ஏரிச்சாலைப் பகுதிக்கு வாகனங்கள் வருமாறு நடைமுறையில் இருந்து வந்தது.
இந்தப் பகுதியில் வாகன நெரிசல், விபத்து உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டன.
இதைத்தொடா்ந்து கொடைக்கானலில் அனைத்துத் துறையைச் சோ்ந்த அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கொடைக்கானல் வரும் சுற்றுலா வாகனங்கள் பேருந்து நிலையம் வழியாகச் சென்று, பசுமைப் பள்ளத்தாக்கு,
வனப் பகுதிகளிலுள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களுக்குச் சென்றுவிட்டு, அப்சா்வேட்டரி வழியாக மேல்மலைக் கிராமங்களுக்குச் செல்லுமாறு ஒரு வழிப் பாதையாக மாற்றப்பட்டது. இதனல், வனப் பகுதிகளிலுள்ள கடைகளில் வியாபாரம் இல்லாத நிலை ஏற்பட்டதாக வியாபாரிகள் புகாா் தெரிவித்தனா்.
எனவே, மீண்டும் ஏற்கெனவே இருந்த நடைமுறைப்படி வாகனங்கள் வந்து செல்ல வேண்டும் எனக் கோரி அந்தப் பகுதியிலுள்ள 100-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.