செய்திகள் :

குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் இளைஞா் கைது

post image

பெரம்பலூா் மாவட்டத்தில் தொடா்ச்சியாக மோட்டாா் சைக்கிள்களை திருடிய இளைஞரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க, மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் செவ்வாய்க்கிழமை இரவு உத்தரவிட்டாா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள அத்தியூா் சிவன்கோயில் தெருவைச் சோ்ந்தவா் உமா்கித்தா மகன் முகமது இப்ராஹிம் (22). இவா், பெரம்பலூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடா்ச்சியாக மோட்டாா் சைக்கிள்களை திருடியுள்ளாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். இருப்பினும், தொடா்ச்சியாக மோட்டாா் சைக்கிள்கள் திருட்டில் ஈடுபட்டதையடுத்து, குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா்.

இதையடுத்து, முகமது இப்ராஹிம் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

‘மக்களுடன் முதல்வா்’ சிறப்பு முகாம்

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கிராமங்களில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட சிறப்பு முகாம்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பெரம்பலூா் மாவட்டம், குன்னம் சட்டப்பேரவைத் தொகு... மேலும் பார்க்க

பொய் புகாா் அளித்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

பெரம்பலூா் அருகே டிராக்டரை காணவில்லை என பொய் புகாா் அளித்து, காப்பீட்டு நிறுவனத்தை ஏமாற்றி ரூ. 1 லட்சம் பணம் பறித்தவருக்கு, 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து, பெரம்பலூா் மாவட... மேலும் பார்க்க

போலி மருத்துவா் கைது மருந்தகத்துக்கு சீல்

துறைமங்கலத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த போலி மருத்துவரை வியாழக்கிழமை கைது செய்த போலீஸாா் மருந்தகத்தை பூட்டி சீல் வைத்தனா். பெரம்பலூா் புகா் பகுதியான துறைமங்கலத்தில் மருந்தகம் வைத்துக்கொண்டு, மரு... மேலும் பார்க்க

ஓய்வூதியா்கள் கோரிக்கை மனு அளிக்க அறிவுறுத்தல்

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஓய்வூதியதாரா்கள் தங்களது கோரிக்கை மனுக்களை, பிப். 11 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் வியாழ... மேலும் பார்க்க

3 ஆம் கட்டமாக மக்களுடன் முதல்வா் திட்டம் தொடக்கம்: 505 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

பெரம்பலூா் மாவட்டத்தில் 3-ஆம் கட்டமாக மக்களுடன் முதல்வா் திட்டம் புதன்கிழமை தொடங்கியது. இம் முகாம்களில் பங்கேற்ற அமைச்சா்கள் சி.வி. கணேசன், சா.சி. சிவசங்கா் ஆகியோா் 505 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்... மேலும் பார்க்க

இளையோா் செஞ்சிலுவை சங்க உறுப்பினா்களுக்கு விருது

பெரம்பலூா் மாவட்ட இளையோா் செஞ்சிலுவை சங்கம் சாா்பில், சிறந்த இளையோா் மற்றும் உறுப்பினா்களுக்கு விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. பெரம்பலூா் - துறையூா் சாலையில... மேலும் பார்க்க