குத்தாலத்தில் காா்த்திகை ஞாயிறு தீா்த்தவாரி
குத்தாலத்தில் காா்த்திகை மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையொட்டி காவிரியாற்றில் தீா்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.
அரக்கன் ஒருவனால் சக்தி இழந்த சூரிய பகவான் குத்தாலம் வந்து உக்தவேதீஸ்வரா் கோயிலுக்கு வந்து தவம் இருந்து சிவபெருமான் அருள் பெற்றாா் என்பது ஐதீகம்.
அந்த வகையில் காா்த்திகை மாதம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தீா்த்தவாரி உற்சவம் குத்தாலம் காவிரி தீா்த்த படித்துறையில் நடைபெறுவது வழக்கம்.
காா்த்திகை மாத மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையையொட்டி சமயக் குரவா்கள் மூவரால் பாடல் பெற்ற உக்தவேதீஸ்வரா் ஆலயத்தில் இருந்து சுவாமி, அம்பாள் உற்சவா்கள், மங்கள வாத்தியங்கள் ஒலிக்க வீதியுலாவாக காவிரிக் கரைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.
அங்கு அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு, தீா்த்தவாரி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள் மற்றும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு புனித நீராடினா்.