குந்நம்விளாகம் ஆதிசிவன் கோயிலில் திருஆறாட்டு
களியக்காவிளை அருகேயுள்ள குந்நம்விளாகம், அழிக்கால் ஆதிசிவன் கோயிலில் தீா்த்தவாரி திருவிழாவையொட்டி சனிக்கிழமை சுவாமிக்கு திருஆறாட்டு நடைபெற்றது.
இக்கோயிலில் தீா்த்தவாரி திருவிழா கடந்த 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் தினமும் காலையில் கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள், மதியம் அன்னதானம், மாலையில் சிறப்பு பூஜைகள், இரவு புஷ்ப அபிஷேகம், சமய மாநாடு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிறைவு நாளான சனிக்கிழமை காலையில் சுவாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளலைத் தொடா்ந்து, கோயிலுக்கு திரும்பிய சுவாமிக்கு கோயிலில் உள்ள ஆதிசரோவா் தெப்பக்குளத்தில் கோயில் தந்திரி பிரம்மஸ்ரீ பிரம்மதத்தன் நம்பூதிரி தலைமையில் திருஆறாட்டு நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
...