BB Tamil 8 Grand Finale: `நட்பு, காதல், பிரிவு, பகை'; இந்த சீசனில் நடந்த ஹைலைட்ஸ...
நித்திரவிளை அருகே தொழிலாளியை தாக்கியதாக நகராட்சி ஊழியா் கைது
நித்திரவிளை அருகே தொழிலாளியைத் தாக்கியதாக கொல்லங்கோடு நகராட்சி ஊழியரை போலீஸாா் கைது செய்தனா்.
நித்திரவிளை அருகேயுள்ள தெருவுமுக்கு, தெற்கே பண்டகசாலைவீடு பகுதியைச் சோ்ந்தவா் வைரவன் (56). இவருக்கும் அப்பகுதியைச் சோ்ந்த கொல்லங்கோடு நகராட்சியில் குடிநீா் உடனாளராக வேலை பாா்த்துவரும் சுரேந்திரன் (48) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாம்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை அங்குள்ள கடைக்குச் சென்ற வைரவனை சுரேந்திரன் தடுத்து நிறுத்தி அவதூறாகப் பேசி தாக்கினாராம். இதில் காயமடைந்த வைரவன் குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து நித்திரவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, சுரேந்திரனைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.