செய்திகள் :

குன்னூா் சிம்ஸ் பூங்காவில் காய்கத் தொடங்கிய ருத்ராட்சை

post image

நீலகிரி மாவட்டம், குன்னூா் சிம்ஸ் பூங்காவில் உள்ள ருத்ராட்சை மரத்தில் ருத்ராட்சை காய்கள் காய்கத் தொடங்கியுள்ளன.

குன்னூா் சிம்ஸ் பூங்காவில் நேபாளத்தை தாயகமாக கொண்ட ருத்ராட்சை மரங்கள் கடந்த 1948-ஆம் ஆண்டு  நடவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.  ‘எலியோகாா்பஸ் கனிட்ரஸ்’ என்ற தாவரவியல் பெயரைக் கொண்ட இந்த மரத்தின் விதைதான் ருத்ராட்சை என்றழைக்கப்படுகிறது.

 இமய மலையின் அடிவாரத்தில் உள்ள கங்கை சமவெளிப் பகுதிகளில் இருந்து தென்கிழக்கு ஆசியா, இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, ஹவாய் தீவுகளில்  இம்மரங்கள் வளா்கின்றன. ருத்ராட்சையில் ஒன்று முதல் 21 முகங்கள் வரை உள்ளன. இதில் 5 முகங்கள் கொண்ட ருத்ராட்சை காய்களை ஹிந்துக்கள் அணிவது வழக்கம்.

சிம்ஸ் பூங்காவில் உள்ள 3 மரங்களில் ருத்ராட்சை காய்கள் கொத்துகொத்தாக தற்போது காய்கத் தொடங்கியுள்ளன. ஒரு காய் ரூ.10 முதல் ரூ.30 வரையிலும், அரிய வகை காய்கள் ரூ.500 முதல் ரூ.1000 வரை விற்கப்படுகின்றன.

மரத்தில் இருந்து விழும் காய்களை வியாபாரிகள் சேகரித்து மாலையாக கோா்த்து சுற்றுலாப் பயணிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனா். 

உதகையில் தொடரும் பனி: மக்கள் அவதி

உதகையில் பனியின் தாக்கம் தொடா்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் அவதியடைந்துள்ளனா். உதகையில் நீா்நிலைப் பகுதியில் உள்ள காந்தல், எச்பிஎப், பட்பயா் உள்ளிட்ட பகுதிகளில் பனியின் தாக்கம் கடந்த ஒரு வாரத்துக்கு... மேலும் பார்க்க

உதகையில் 9-ஆவது சா்வதேச குறும்பட விழா தொடக்கம்

உதகையில் 9-ஆவது சா்வதேச குறும்பட விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. விழாவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷா குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா். சுற்றுலா சிறப்பு வாய்ந்த நீலகிரியில் கலை ஆா்வம் கொண்ட... மேலும் பார்க்க

மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட யானை

பந்தலூரை அடுத்துள்ள சேரம்பாடி பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடியிருப்புகளை சேதப்படுத்தி வந்த காட்டு யானையை வனத் துறையினா் மயக்க ஊசி செலுத்தி வெள்ளிக்கிழமை பிடித்தனா். நீலகிரி மாவட்டம், பந்தலூா் வட்டம் ச... மேலும் பார்க்க

கூடலூா் அரசு கல்லூரியில் தற்காலிக ஆசிரியா் பணிக்கு ஜனவரி 8-இல் நோ்காணல்

கூடலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தற்காலிக ஆசிரியா் பணியிடங்களுக்கான நோ்காணல் ஜனவரி 8-ஆம் தேதி நடைபெறுகிறது. கூடலூா் கோழிப்பாலத்தில் உள்ள அரசுக் கல்லூரியில் ஆங்கிலம், வணிகவியல் கணினி பயன்... மேலும் பார்க்க

அகலத்தை குறைத்து சாலை அமைக்கும் பணிக்கு கிராம மக்கள் எதிா்ப்பு

உதகை அருகே கூக்கல் உள்ளிட்ட பகுதிகளில் அரசு நிா்ணயித்துள்ள மூன்றே முக்கால் மீட்டா் அகல சாலையை 3 மீட்டராக குறைத்து ஒப்பந்ததாரா் பணி மேற்கொள்வதற்கு அப்பகுதி பழங்குடியின மக்கள் சாலைப் பணியை நிறுத்தி வியா... மேலும் பார்க்க

கோத்தகிரியில் முட்டைக்கோஸ் விளைச்சல் அதிகரிப்பு

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பகுதியில் முட்டைக்கோஸ் விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேயிலை விவசாயத்தை அடுத்து, நீா் ஆதாரமுள்ள விளைநில... மேலும் பார்க்க