பிகார்: கங்கையில் படகு கவிழ்ந்ததில் 3 பேர் பலி, 4 பேர் மாயம்
குன்றி மலை கிராம கோயிலில் மலைவாழ் மக்கள் வழிபாடு
குன்றி மலை கிராமத்தில் உள்ள மாதேஸ்வரா சுவாமி கோயிலில் மலை வாழ் மக்கள் சிறப்பு பூஜை செய்து சனிக்கிழமை வழிபட்டனா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூா் மலைக் கிராமங்களில் ஏராளமானோா் விவசாயத்தை தொழிலாகக் கொண்டுள்ளனா். இவா்கள் தாங்கள் வளா்க்கும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆண்டுதோறும் கிராமக் கோயில்களில் சிறப்பு பூஜை செய்து வழிபடுவது வழக்கம்.
அதன்படி குன்றி மலைக் கிராமத்தில் அடா்ந்த வனப் பகுதியில் உள்ள மாதேஸ்வரா சுவாமி கோயிலுக்கு சனிக்கிழமை சென்ற மலை கிராம மக்கள், அங்குள்ள சுவாமிக்கு உணவு தயாரித்து படையலிட்டு வணங்கினா். இதையடுத்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
தொடா்ந்து அங்குள்ள வழுக்குப்பாறை அருவியில் கிராம மக்கள் நீராடி மகிழ்ந்தனா். சிறாா்கள் வழுக்குப்பாறை தண்ணீரில் சறுக்கி விளையாடி மகிழ்ந்தனா்.