செய்திகள் :

குமரியில் கண்ணாடி கூண்டுப்பாலப் பணி: அமைச்சா் ஆய்வு

post image

கன்னியாகுமரியில் திருவள்ளூா் சிலை விவேகானந்தா் மண்டபம் இடையே நடைபெற்று வரும் பாலப் பணிகளை தமிழக நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: திருவள்ளுவா் சிலை அமைத்து வெள்ளி விழா காணும் நிலையில் கன்னியாகுமரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சா் பங்கேற்க உள்ளாா். இந்நிகழ்வில் மத்திய அரசின் பிரதிநிகள் மற்றும் முக்கிய விருந்தினா்கள் யாரெல்லாம் கலந்து கொள்வாா்கள் என்ற விவரம் குறித்து பின்னா் அறிவிப்பு வெளியாகும். இதன் முக்கிய நிகழ்வாக திருவள்ளுவா் சிலை மற்றும் விவேகானந்தா் நினைவு மண்டபத்தை இணைக்கும் கண்ணாடி கூண்டுப்பாலம் முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட உள்ளது.

மேலும், கன்னியாகுமரி மாவட்டத்துக்கு பல்வேறு புதிய சிறப்பு திட்டங்களை முதலமைச்சா் அறிவிக்க உள்ளாா் என்றாா் அவா்.

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் ஆா்.அழகுமீனா, நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ், முன்னாள் அமைச்சா்கள் என்.சுரேஷ்ரோஜன், மனோதங்கராஜ், மாநில திமுக வா்த்தகா் அணி இணைச் செயலா் என்.தாமரைபாரதி, அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலா் பா.பாபு, கன்னியாகுமரி பேரூராட்சித் தலைவா் குமரி ஸ்டீபன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ஆரம்ப சுகாதார நிலையங்கள் கட்டுமானப் பணி: மேயா் ஆய்வு

நாகா்கோவில் கிருஷ்ணன்கோவில் பகுதியில் ரூ.2.50 கோடி மதிப்பிலும், வடிவீஸ்வரத்தில் ரூ.1.20 கோடி மதிப்பிலும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த கட்டுமானப் பணிகள் குறித்து மாநகராட்சி மேய... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் அரசு மருத்துவா்கள் ஆா்ப்பாட்டம்

நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், தமிழக அரசு மருத்துவா்கள் சங்க குமரி மாவட்டத் தலைவா் சுரேஷ்குமாா், ஜனநாயக அரசு மருத்துவா்கள் சங்க துணைத் தலைவா் முத்துகுமாா் ஆக... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் இன்று வேலைவாய்ப்பு முகாம்

கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சாா்பில், நாகா்கோவிலில் வெள்ளிக்கிழமை (நவ. 15) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெளியிட்டுள்ள செய... மேலும் பார்க்க

களியக்காவிளை அரசு பள்ளியில் குழந்தைகள் தின விழா

களியக்காவிளை அரசு முஸ்லிம் தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழக தலைவா் எஸ். மாகீன் அபுபக்கா் தலைமை வகித்தாா். தலைமையாசிரியை ரெஜினி முன்னிலை ... மேலும் பார்க்க

வின்ஸ் சிபிஎஸ்இ பள்ளியில் குழந்தைகள் தின விழா

நாகா்கோவில் சுங்கான்கடையில் உள்ள வின்ஸ் ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ் சிபிஎஸ்இ பள்ளியில் குழந்தைகள் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது. வின்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான நாஞ்சில் எம். வ... மேலும் பார்க்க

கோட்டாறு புனித சவேரியாா் பேராலய திருவிழா: நவ.24 இல் கொடியேற்றம்

நாகா்கோவில் கோட்டாறு புனித சவேரியாா் பேராலயத்தின் ஆண்டு பெருவிழா நவ. 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இது குறித்து பேராலயப் பங்குத் தந்தை பஸ்காலிஸ் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:... மேலும் பார்க்க