செய்திகள் :

குமரி அனந்தன் உடலுக்கு 72 குண்டுகள் முழங்க இறுதிச் சடங்கு

post image

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் உடலுக்கு 72 குண்டுகள் முழங்க தமிழக அரசு சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

வடபழனி ஏ.வி.எம். மின்மயானத்தில் குமரி அனந்தன் உடலுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் 24 காவலர்கள் 3 சுற்றுகள் என 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

மின்மயானத்தில் குடும்ப உறுப்பினர்களுடன் புதுச்சேரி துணை நிலை ஆளுநரும் குமரி அனந்தனின் மகளுமான தமிழிசை செளந்தரராஜன், காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

காங்கிரஸ் மூத்த தலைவா் குமரி அனந்தன் (92) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் தனியாா் மருத்துவமனையில் இன்று நள்ளிரவு 12:15 மணியளவில் காலமானாா்.

வயது மூப்பு மற்றும் சிறுநீரக பிரச்னை காரணமாக, சென்னையிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், காலமானார்.

அவரின் உடல், சாலிகிராமத்திலுள்ள அவரது மகளும், தமிழக பாஜக முன்னாள் தலைவருமான தமிழிசை செளந்தரராஜனின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அங்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

இதன் பிறகு அவரின் உடல் வடபழனி ஏ.வி.எம். மின்மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு தமிழ்நாடு அரசு சார்பில் 24 காவலர்கள் 3 சுற்றுகள் என 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

சிறையிலிருந்து சிறுவன் தப்பியோட்டம்!

தஞ்சாவூர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலிருந்து தப்பியோடிய சிறுவனைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.தஞ்சாவூர் மணிமண்டபம் அருகே சிறுவர் சீர்திருத்தப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் திருட்... மேலும் பார்க்க

ஈஸ்டர் திருநாள்: தூத்துக்குடியில் கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனை!

தூத்துக்குடி: ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயம், திரு இருதய ஆலயம் உள்ளிட்ட கிறிஸ்தவ தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.உலகம் முழுவதும் இயேசு... மேலும் பார்க்க

விசைத்தறி நெசவாளர்கள் தொடர் உண்ணாவிரதம்: அதிமுக ஆதரவு

கோவையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் விசைத்தறி நெசவாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆதரவு தெரிவித்தார்.கோவையில் விசைத்தறி நெசவாளர்கள் மின்கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, உதிரி... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் கப்பல் மாலுமி வெட்டிக்கொலை!

தூத்துக்குடி: தூத்துக்குடியில் கப்பல் மாலுமி மர்ம நபர்களால் சனிக்கிழமை இரவு வெட்டப்பட்ட நிலையில், அவர் ஞாயிற்றுக்கிழமை பலியானார்.தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த சகாயகுமார் மகன் மரடோனா(30). க... மேலும் பார்க்க

பரபரப்பான சூழலில் கூடிய மதிமுக நிர்வாகக் குழு!

பரபரப்பான சூழலில் மதிமுக நிர்வாகக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.சென்னையில் உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழத்தின் தலைமை அலுவலகமான தாயகத்தில் நிர்வாகக் கூட்டம் நடைபெற்று வருகிறது.மதிமுக அவ... மேலும் பார்க்க

ஈஸ்டர் திருநாள்: கிறிஸ்துவ தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனை!

ஈஸ்டர் திருநாள் திருநாளை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள கிறிஸ்துவ தேவாலங்களில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த நாளை உலகம் ம... மேலும் பார்க்க