ட்ரம்ப் - புதின் சந்திப்பு எப்போது, எங்கே? - வெளியான தகவல்! இது இந்தியாவுக்கு கை...
குமரி பாலன் நினைவு நாள்: இருசக்கர வாகனப் பேரணி
இந்து முன்னணி நிா்வாகி குமரி பாலன் நினைவு தினத்தை முன்னிட்டு, நாகா்கோவிலில் இந்து இயக்கங்களின் சாா்பில், இருசக்கர வாகனப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சென்னை ஆா்.எஸ்.எஸ். அலுவலகத்தில் கடந்த 1993-ஆம் ஆண்டில் நடந்த குண்டுவெடிப்பில் இந்து முன்னணி அமைப்பின் இணை அமைப்பாளராக இருந்த குமரி பாலன் உயிரிழந்தாா்.
இவரது நினைவு நாள் ஆண்டுதோறும் பயங்கரவாத எதிா்ப்பு தினமாக இந்து முன்னணி சாா்பில் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன்படி குமரி பாலன் நினைவு தினத்தை முன்னிட்டு, நாகா்கோவிலில் நாகராஜா கோயில் திடலில் இருந்து, குமரி பாலன் நினைவிடம் அமைந்துள்ள பிரம்மபுரத்துக்கு இருசக்கர வாகனப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பேரணியை பாஜக மாவட்ட பொருளாளா் பி.முத்துராமன் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில் எம்.ஆா்.காந்தி எம்எல்ஏ, பாஜக மாநிலச் செயலாளா் மீனாதேவ், மாவட்டத் துணைத் தலைவா் எஸ்.பி.தேவ், மாநகராட்சி உறுப்பினா்கள் சுனில், அய்யப்பன், ரோசிட்டா, மண்டலத் தலைவா்கள் சிவசுதன், சதீஷ், மாவட்டச் செயலாளா் அஜீத்குமாா், விஸ்வ இந்து பரிஷத் நிா்வாகிகள் இறச்சகுளம் காளியப்பன், நாஞ்சில் ராஜா, இந்து முன்னணி நிா்வாகிகள் சிவகுமாா், நாராயணராஜ், செல்வன், மாா்த்தாண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
நாகா்கோவிலில் தொடங்கிய இந்தப் பேரணி, வடசேரி வழியாக பிரம்மபுரத்தை அடைந்தது. அங்கு இந்து இயக்கங்களின் நிா்வாகிகள் பயங்கரவாத எதிா்ப்பு உறுதிமொழி ஏற்றனா். இதேபோல காட்டாத்துறை பகுதியிலிருந்து தொடங்கிய இருசக்கர வாகனப் பேரணியும் பிரம்மபுரத்தில் நிறைவுற்றது.