செய்திகள் :

கும்பமேளாவில் பலியானவர்களில் 11 பிகார் பக்தர்கள்!

post image

பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலியான 30 பேரில் 11 பேர் பிகாரைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளதாக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கங்கை, யமுனை மற்றும் புராண சரஸ்வதி சங்கமமான சங்கமத்திற்கு அருகிலுள்ள பகுதியில், மௌனி அமாவாசையின் புனித நீராடுவதற்காகக் கூடியிருந்த பக்தர்களின் கூட்டம் காரணமாக புதன்கிழமை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 60 பேர் காயமடைந்தனர்.

இந்த நிலையில், கூட்ட நெரிசலில் ஈடுபட்ட 30 பேரில், நான்கு பேர் கோபால்கஞ்சைச் சேர்ந்தவர்கள், 2 பேர் அவுரங்காபாத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் பாட்னா, முசாபர்பூர், சுபால், பாங்கா மற்றும் மேற்கு சம்பாரண் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என முதல்வர் அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த துயரச் சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் நிதிஷ் குமார், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளார். மேலும், காயமடைந்த ஒவ்வொருவருக்கும் முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.50 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தோல்வி விரக்தியில் வன்முறையில் ஈடுபடும் பாஜக: கேஜரிவால் கண்டனம்!

தில்லி தேர்தல் பிரசாரத்தில் ஆம் ஆத்மி வேட்பாளரை பாஜகவினர் தாக்கியதாக அரவிந்த் கேஜரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.தில்லியில் வருகிற புதன்கிழமையில் (பிப். 5) சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மா... மேலும் பார்க்க

மத்திய பட்ஜெட் குறித்து ராகுல் காந்தி

மத்திய பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய... மேலும் பார்க்க

பிரதமரின் இதயத்தில் நடுத்தர வர்க்கத்தினர்: பட்ஜெட் குறித்து அமித் ஷா புகழாரம்!

பிரதமர் நரேந்திர மோடியின் இதயத்தில் எப்போதும் நடுத்தர வர்க்கத்தினர் குறித்த எண்ணங்களே இருப்பதாக மத்திய அமைச்சர் அமித் ஷா கூறினார்.நாடாளுமன்றத்தில் இன்று காலை தொடங்கிய பட்ஜெட் கூட்டத் தொடரில் மத்திய பொ... மேலும் பார்க்க

வருமான வரி உச்ச வரம்பு அதிகரிப்பு! எவ்வாறு பயனளிக்கும்?

வரும் 2025 - 26ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தனிநபர் வருமான வரி உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக அதிகரித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.இதனுடன், மாத வர... மேலும் பார்க்க

ரயில்வேயை கண்டுகொள்ளாத மத்திய பட்ஜெட்! பங்குச் சந்தையில் எதிரொலி!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்.1ஆம் தேதி தாக்கல் செய்த மத்திய நிதிநிலை அறிக்கையில், ரயில்வே துறை தொடர்பான எந்த அறிவிப்பும் இல்லாததால், பங்குச் சந்தைகளில் ரயில்வே துறை தொடர்பான பங்குகள் கடு... மேலும் பார்க்க

பாஜக முக்கியத் தலைவர்களின் 3 மாதப் பயணச் செலவு ரூ. 168.9 கோடி!

மக்களவைத் தேர்தலின்போது பாஜக செலவினம் குறித்த அறிக்கை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் ஜூன் வரையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவின் செலவினங்கள் குறித்த அறிக்கையை இந்த... மேலும் பார்க்க