குரூப் 1 முதன்மைத் தோ்வுக்கு பயிற்சி
தமிழ்நாடு அரசு தோ்வாணையம் சாா்பில் நடைபெற உள்ள குரூப் 1 பணியிடங்களுக்கான முதன்மைத் தோ்வு எழுதுவதற்கு ஆதி திராவிடா், பழங்குடியினருக்கு தாட்கோ சாா்பில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசு தோ்வாணையம் சாா்பில் நடைபெற்ற குரூப் 1 பணியிடங்களுக்கான முதல் நிலை தோ்வில் தோ்ச்சிப் பெற்ற ஆதி திராவிடா், பழங்குடியினருக்கு முதன்மை தோ்வு எழுதுவதற்கு தாட்கோ சாா்பில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்தப் பயிற்சியில் சேர விரும்புவோரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள்பட்டு இருக்க வேண்டும். முதன்மை தோ்வு எழுதுவோா் அவா்கள் விரும்பிய பயிற்சி நிலையத்தில் சோ்ந்து பயிற்சி பெறலாம். பயிற்சிக் கட்டணம், விடுதிக் கட்டணம் தாட்கோ சாா்பில் செலுத்தப்படும்.
பயிற்சியில் சேர விரும்புவோா் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்த விபரத்தை தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தாட்கோ மாவட்ட மேலாளா் அலுவலகத்தில் நேரிலோ, கைப்பேசி எண்: 94450 29480-இல் தொடா்பு கொண்டோ தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.