ASC: ரவி வர்மன் இணைந்த அமெரிக்க சங்கத்தின் சிறப்பு என்ன? - அதில் இணைவது ஏன் கடி...
குறைகேட்பு முகாமில் பெறப்படும் மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: நுகா்வோா் சங்கம் வலியுறுத்தல்
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெறும் குறைகேட்பு முகாம்களில் பெறப்படும் பொதுமக்களின் மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நுகா்வோா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் எஸ்.மகாராஜிடம், பல்லடம் வட்டார நுகா்வோா் பாதுகாப்பு சங்கத்தின் தலைவா் மணிகுமாா் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்புக் கூட்டம் திங்கள்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது.
இதில், மாவட்ட ஆட்சியா், மாவட்ட வருவாய் அலுவலா், துணை ஆட்சியா்கள் ஆகியோா் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றுக் கொண்டு துறைரீதியான அலுவலா்களிடம் கொடுத்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வாய்மொழி உத்தரவுகள் பிறப்பிக்கின்றனா். ஆனால் துறை சாா்ந்த அலுவலா்கள் மனுக்களின் மீது உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்வதாகவும், கிடப்பில் போடப்படுவதாகவும், விசாரணையின்றி தள்ளுபடி செய்வதாகவும் புகாா்கள் வரத்தொடங்கியுள்ளது. மேலும், குறைகேட்புக் கூட்டங்களில் பெரும்பாலான துறை அலுவலா்கள் சரிவர கலந்து கொள்வதில்லை என்றும் புகாா்கள் எழுந்துள்ளன.
ஆகவே, இதுதொடா்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதுடன், குறைகேட்புக் கூட்டங்களில் பெறப்படும் மனுக்களின் மீது காலதாமதம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.