செய்திகள் :

குவைத்தில் உயிரிழந்த தமிழர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு

post image

குவைத் நாட்டில் உயிரிழந்த கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இருவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள உத்தரவில்,

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் வட்டம், மங்கலம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த முகமது யாசின் மற்றும் முகமது ஜுனைத் ஆகிய இருவரும் குவைத் நாட்டில் ஓட்டுநர்களாக பணியாற்றி வந்தனர்.

இந்த நிலையில், கடந்த 19 ஆம் தேதி கடும் குளிரிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவதற்காக இருவரும் தங்கியிருந்த அறையில் தீ மூட்டியதாகவும், நீண்ட இரவின் காரணமாக தீயை அணைக்காமல் அப்படியே உறங்கியதால் நெருப்புப் அணைந்து ஏற்பட்ட புகையினால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்துள்ளனர்.

இதையும் படிக்க |டங்ஸ்டன் விவகாரத்தில் கிடைத்த வெற்றி நமக்கான வெற்றி: முதல்வர் ஸ்டாலின்

இருவரது உடல்களும் கடந்த 22 ஆம் தேதி குவைத் நாட்டிலேயே உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது என்று துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த இருவரது குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் தலா ரூ.5 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 450 கன அடியாக அதிகரித்துள்ளது.இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 110.98 அடியில் இருந்து 110.75 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 403 கன அடியிலி... மேலும் பார்க்க

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 2 பேர் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டருந்த தமிழக மீனவர்களை, எல்லைத் தாண்டி மீன்... மேலும் பார்க்க

பள்ளிக் கல்வித் துறையில் 47,000 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளீயீடு

சென்னை: பள்ளிக் கல்வித் துறையில் 28,030 பட்டதாரி ஆசிரியா் பணியிடங்கள் உள்பட 47,000 தற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரமாக்கப்பட்டுள்ளன. அதேசமயம், 5,418 பணியிடங்களில் பணிபுரிபவா்கள் ஓய்வு பெறும்போது அவை ரத்... மேலும் பார்க்க

ஸ்ருதிஹாசன் பிறந்த நாள்: டிரெயின் படத்தின் சிறப்பு விடியோ!

ஸ்ருதிஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு, இயக்குநர் மிஷ்கினின் “டிரெயின்” திரைப்படத்தின் சிறப்பு விடியோ வெளியிடப்பட்டுள்ளது.விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் டிரெயின் படத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன், நரேன் ஆ... மேலும் பார்க்க

போக்குவரத்து நெரிசல்: சென்னை - திண்டிவனம் இடையே புதிய சாலை!

சென்னை மற்றும் திண்டிவனம் இடையே புதிய சாலை அமையவுள்ளது.தீபாவளி, பொங்கல் பண்டிகையின்போது சொந்த ஊர்களுக்கு செல்லும்போதும் சென்னைக்கு திரும்பும்போதும் சென்னை - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் அதிக வாகன ந... மேலும் பார்க்க

தொழில்துறையினரை ஏமாற்றுவதுதான் அரசின் நோக்கமா? - அண்ணாமலை

சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை திமுக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.இது பற்றி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தன்னுடை... மேலும் பார்க்க