`மகாராஷ்டிராவில் இந்தி திணிப்பு'- மராத்திக்காக பகையை மறந்து கூட்டணி சேரும் தாக்க...
கூடலூர் : சிறைக் காவலர்களின் கொடூர தாக்குதல்; பதைபதைக்க வைக்கும் புகைப்படங்கள் - காவலர்கள் சஸ்பெண்ட்
நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த நிஜாமுதீன் என்ற இளைஞர் விசாரணை கைதியாக கூடலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், சிறைக் காவலர்கள் அவரை கண்மூடித்தனமாக தாக்கியிருக்கிறார்கள். நிஜாமுதீனின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் நீதித்துறை, வருவாய்த்துறை மற்றும் சிறைத்துறை உயர் அதிகாரிகள் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது .
முதல்கட்ட விசாரணையில் வாக்குவாதம் காரணமாக நிஜாமுதீனை சிறைக்குள் வைத்து கொடூரமாக தாக்கியது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து சிறை கண்காணிப்பாளர் கங்காதரன், சிறைத்துறை காவலர்கள் மலர்வண்ணன், சின்னசாமி, தினேஷ் பாபு, அருண், கோபி ஆகிய 6 பேரையும் சஸ்பெண்டு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இரும்பு கம்பியாலும் லத்தியாலும் நிஜாமுதீனை கண்மூடித்தனமாக தாக்கிய சிறை காவலர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரின் உறவினர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், நிஜாமுதீன் மீது நிகழ்த்தப்பட்ட சித்ரவதைக்கு ஆதாரமான புகைப்படங்கள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மிருக வெறி தாக்குதலால் நிஜாமுதீனின் உடல் முழுவதும் கடுமையான ரத்தக்காயங்கள் மற்றும் ரணங்களாக மாற்றிய கொடூர சிறை காவலர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர்.