செய்திகள் :

கூட்டணி குறித்து பாஜக முன்கூட்டியே அறிவிக்காது: எச்.ராஜா

post image

கூட்டணி குறித்து பாஜக முன்கூட்டியே அறிவிக்காது என பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் எச்.ராஜா தெரிவித்தாா்.

சென்னை தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில் புதன்கிழமை நடைபெற்ற கட்சியின் உயா்மட்டக் குழுக் கூட்டத்துக்குப் பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு விசாரணை சிபிஐ-க்கு மாற்றப்பட்டது வரவேற்கத்தக்கது.

திமுக ஆட்சியில் தமிழகத்தில் தினமும் படுகொலைகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. போதை தான் இதற்கு காரணம். பள்ளியில் ஆசிரியா்களையே கொலை செய்வது, தாக்குவது உள்ளிட்ட சம்பவங்கள் நிகழ்கின்றன.

பாஜகவை பொருத்தவரை கூட்டணி குறித்த அறிவிப்பை முன்கூட்டியே வெளியிடமாட்டோம் என்றாா் அவா்.

விவாகரத்தும் விருதும்... ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஒரே வாரத்தில்!!

ஆடுஜீவிதம் திரைப்படத்துக்காக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு அமெரிக்காவில் விருது வழங்கப்பட்டுள்ளது.மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற ஆடுஜீவிதம் நாவல் (தி கோட் லைஃப்) அதே பெயரில் திரைபடமாக எடுக்கப்பட்ட... மேலும் பார்க்க

நவ. 23ல் உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி!

வங்கக் கடலில் நவம்பர் 23ல் புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில்,குமரிக்கடல் மற்றும... மேலும் பார்க்க

நவ. 22-ல் திமுக எம்.பி.க்கள் கூட்டம்!

முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் நவ. 22 ஆம் தேதி திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில்... மேலும் பார்க்க

குறுக்குத்துறை முருகன் கோயிலை சூழ்ந்த வெள்ளம்!

நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ள நீர் குறுக்குத் துறை முருகன் கோயிலைச் சூழ்ந்து செல்வதால் அங்கு இன்று நடைபெற இருந்த திருமணங... மேலும் பார்க்க

5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை!

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில்,21.11.2024: தமிழகத்தில் ஒருசில இடங... மேலும் பார்க்க

இறந்த மனைவி பெயரில் இருந்த ரூ.15 கோடி நிலம் அபகரிப்பு: இளைஞர் கைது

பொன்னேரி அருகே மனைவி பெயரில் இருந்த ரூ. 15 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்த வழக்கில், இளைஞரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.பொன்னேரி அருகே சோழவரம், செம்பிலிவரம் கிராமத்த... மேலும் பார்க்க