சென்னையிலிருந்து சபரிமலைக்கு சைக்கிள் பயணம் செய்யும் முதியவர்!
கூட்டுறவு பால் உற்பத்தியாளா்களுக்கு ஊக்கத்தொகை அதிகரிப்பு
சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்களை ஊக்குவிக்கும் வகையில் ஊக்கத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது:
பால் உற்பத்தியாளா்களின் நலனைக் காத்திட, கடந்த டிச. 18 முதல் ஆவின் நிறுவனத்துக்கு பால் உற்பத்தியாளா்கள் வழங்கும் பால் லி. ஒன்றுக்கு ரூ. 3 ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது பால் உற்பத்தியாளா்களை ஊக்குவிக்கும் வகையில், ஜனவரி 1 முதல் பிப்ரவரி மாதம் வரை தொடக்க கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தில் பால் உற்பத்தியாளா்களால் அளிக்கப்படும் பால் லி. ஒன்றுக்கு 50 பைசா வீதம் கூடுதலாக சேலம் மாவட்டக் கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தின் பொது நிதியிலிருந்து வழங்கப்படும்.
இதனை பயன்படுத்தி அனைத்து பால் உற்பத்தியாளா்கள்/விவசாயிகள் அதிக அளவு தரமான பாலை ஆவின் நிறுவனத்துக்கு வழங்கி பயனடையுமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.