திண்டுக்கல்: தனியார் மருத்துவமனையில் 'தீ' விபத்து - சிறுவன் உட்பட 6 பேர் பலியான ...
கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மகளுக்காக நீதி கோரி ராகுலுக்கு கடிதம்!
உத்தரப் பிரதேசத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, பலியான பெண்ணுக்கு நீதி வேண்டி ராகுலுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸில் 2020 ஆம் ஆண்டில் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்திற்கு இன்று வரையில் நீதி கிடைக்கவில்லை என்று பலியான பெண்ணின் குடும்பத்தினர் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியிடம் கோரிக்கை வைத்து கடிதம் எழுதியுள்ளனர்.
பலியான பெண்ணின் குடும்பத்தினர் அளித்த கடிதத்தையடுத்து, வியாழக்கிழமை (டிச. 12) அவர்களின் வீட்டுக்கு நேரில் சென்று ராகுல் காந்தி விவரங்களைக் கேட்டறிந்தார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் சுமார் 35 நிமிடங்கள் வரையில் ராகுல் காந்தி உரையாடினார். மேலும், கடிதத்தையும் காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
கடிதத்தில் அவர்கள் தெரிவித்திருப்பதாவது, என் மகள் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதுடன், அவரது முதுகெலும்பு உடைக்கப்பட்டு, உடலும் சிதைக்கப்பட்டது. மேலும், குடும்பத்தினரின் அனுமதியின்றி, அவரது உடலைக் காவல்துறையினர் தகனம் செய்து விட்டனர். தகனம் செய்யப்பட்டது, எங்கள் மகளின் உடல் தானா? என்பதுகூட தெரியவில்லை.
இதனைத் தொடர்ந்து, குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலையும் வீடும் வழங்கப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தார். ஆனால், இன்றுவரையில் வேலையும் வீடும் வழங்கப்படவில்லை.
அதுமட்டுமின்றி, குற்றம் செய்தவர்கள் சுதந்திரமாக வெளியில் நடமாடுகிறார்கள்; ஆனால், சி.ஆர்.பி.எஃப். பாதுகாப்பு என்ற பேரில் வீட்டுக்குள்ளேயே நாங்கள் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வருகிறோம்’’ என்று கூறியுள்ளனர்.
இதையும் படிக்க:மணிப்பூரைச் சொன்னால் கரீனா கபூரை சந்திக்கிறார் மோடி: காங்கிரஸ்