விக்கெட் ஆகாமலே நடந்து சென்றது ஏன்? கிண்டலுக்குள்ளானது குறித்து மிட்செல் மார்ஷ் ...
கூலி புதிய அறிவிப்பு!
நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளுக்கான கூலி அப்டேட் வெளியாகியுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக கூலி உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.
படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் மற்றும் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் தற்போது ஜெய்ப்பூரில் அமீர் கானுடன் இணைந்து ரஜினி நடித்து வருகிறார்.
இதையும் படிக்க: செல்வராகவன் - ஜி. வி. பிரகாஷ் கூட்டணியில் புதிய படம்!
பான் இந்திய வணிகத்திற்காக படத்தில் பல மாநில நடிகர்களும் இணைந்து நடித்து வருவதால் கூலி மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று மாலை 6 மணிக்கு கூலி படத்தின் புதிய அப்டேட் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது படத்தின் புதிய போஸ்டராகவோ அல்லது கிளிம்ஸ் ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.