Rain Alert: ஒரே இடத்தில் நீடிக்கும் புயல்! - எந்தெந்த மாவட்டங்களுக்கு மழைக்கு வா...
கெட்டுப்போன மீன்களை விற்ற 3 கடைகளுக்கு அபராதம்
சிவகங்கை வாரச்சந்தைப் பகுதியில் கெட்டுப்போன மீன்களை விற்ற 3 கடைகளுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் புதன்கிழமை அபராதம் விதித்தனா்.
சிவகங்கையில் புதன்கிழமைதோறும் வாரச் சந்தை நடைபெறுவது வழக்கம். இந்தச் சந்தையில் மீன் விற்பனை நடந்து வந்த நிலையில், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி சரவணன் தலைமையில் மீன் வளத் துறை உதவி இயக்குநா் சண்முகம் உள்ளிட்டோா் திடீரென சந்தையில் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, கெட்டுப்போன சுமாா் 30 கிலோ மீன்களைப் பறிமுதல் செய்தனா். இந்த மீன்களை விற்பனை செய்த 3 கடைகளுக்கு தலா ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்து குறிப்பாணை வழங்கினா். இதுபோன்ற கெட்டுப்போன உணவுப் பொருள்களை விற்பனை செய்யக்கூடாது என்றும் மீன் விற்பனைக் கடைக்காரா்களிடம் அறிவுறுத்தினா்.
இதே போன்று சிவகங்கை நேரு பஜாா் பகுதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 50 கிலோ நெகிழப் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அபராதம் விதித்தனா்.