செய்திகள் :

கேப்டன் ரோஹித் சர்மாவை ஈடுசெய்யவே முடியாது: மைக்கேல் கிளார்க்

post image

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதாக மே.7ஆம் தேதி அறிவித்தார். இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

கடைசியாக ரோஹித் சர்மா பிஜிடி தொடரில் விளையாடினார். 3-2 என ஆஸ்திரேலியாவுடன் தோல்வியைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா 4,301 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 12 சதங்கள், 18 அரைசதங்களும் அடங்கும்.

இவர் குறித்து முன்னாள் ஆஸி. கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியதாவது:

ரோஹித் சர்மாவின் இழப்பை இந்தியா எப்படி சமாளிக்கும்?

ரோஹித் சர்மா மாதிரியான ஒரு வீரரை எந்த ஒரு அணியும் மிஸ் செய்யும். ஆனால், புத்திசாலிதனமான ஒரு கேப்டனாக அவரை யாருமே ஈடுசெய்ய முடியாது. ரோஹித் சர்மா போட்டியை சிறப்பாக கவனிப்பார் என்றார்.

ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக கே.எல்.ராகுலை தொடக்க வீரராக களமிறக்கலாம். ஆனால், கேப்டனாக அவருக்குப் பதிலாக யாரை நியமிப்பது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ஜஸ்பிரீத் பும்ரா ஏற்கனவே கேப்டனாக அசத்தியிருந்தாலும் நீண்டகால நோக்கில் ஷுப்மன் கில் கேப்டனாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்து அணியின் ஆலோசகராக டிம் சௌதி நியமனம்!

இங்கிலாந்து அணியின் ஆலோசகராக நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் டிம் சௌதி நியமிக்கப்பட்டுள்ளார்.இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விள... மேலும் பார்க்க

10 நொடிகள் அசையாமல் நின்ற இங்கிலாந்து வீரர்..! வைரலாகும் விடியோ!

இங்கிலாந்து வீரர் ஜானி பெயர்ஸ்டோ 10 நொடிகள் அசையாமல் நின்ற விடியோ வைரலாகி வருகிறது. 35 வயதாகும் ஜானி பெயர்ஸ்டோ தற்போது கவுண்டி சாம்பியன்ஷிப் டிவிஷன் 1-இல் விளையாடி வருகிறார். இந்தத் தொடரில் யார்க்‌ஷ்ர... மேலும் பார்க்க

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு ரூ.49 கோடி பரிசுத்தொகை: கடந்த சீசனைவிட 2 மடங்கு அதிகம்!

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அணிகளுக்கான பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.லண்டனில் நடைபெறவிருக்கும் இதன் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவும் தென்னாப்பிரிக்காவும் வரும் ஜூன் மாதம் 11-15ஆம் தேதிகளில் ... மேலும் பார்க்க

விராட் கோலியின் வீழ்ச்சிக்குக் காரணமான ஈகோவும் ‌ஆளுமைச் சிதைவும்!

சச்சின் டெண்டுல்கர் (40), ராகுல் திராவிட் (39), விவிஎஸ் லக்ஷ்மணனை (38) விட குறைவான வயதில் விராட் கோலி (36) ஓய்வுபெற அவரது ஈகோவும் நார்சிஸ்டிக் ஆளுமைக் குறைபாடும்தான் காரணங்கள் என்றால் வியப்பதற்கில்லை.... மேலும் பார்க்க

டெஸ்ட் வரலாற்றில் சாதனை படைத்த ஜடேஜா..! சிஎஸ்கே வாழ்த்து!

இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஐசிசி டெஸ்ட் ஆல்ரவுண்டர் தரவரிசையில் ஜடேஜா அதிக நாள்கள் (1,151 நாள்கள்) முதலிடத்தில் இருந்து சா... மேலும் பார்க்க

4-ஆவது சீசன் ஐஎல்டி20 போட்டிகள் அறிவிப்பு..! முன்னதாகவே தொடங்க காரணம் என்ன?

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐஎல்டி20 போட்டிகள் வரும் டிசம்பரில் தொடங்குகின்றன.உலகம் முழுவதும் டி20 கிரிக்கெட் போட்டிகள் பிரபலமாகி வரும் நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 2023-இல் முதல்முறைய... மேலும் பார்க்க