4-ஆவது சீசன் ஐஎல்டி20 போட்டிகள் அறிவிப்பு..! முன்னதாகவே தொடங்க காரணம் என்ன?
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐஎல்டி20 போட்டிகள் வரும் டிசம்பரில் தொடங்குகின்றன.
உலகம் முழுவதும் டி20 கிரிக்கெட் போட்டிகள் பிரபலமாகி வரும் நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 2023-இல் முதல்முறையாக ஐஎல்டி20 போட்டிகள் நடைபெற்றன.
கடந்த சீசனில் நிகோலஸ் பூரன் தலைமையிலான மும்பை எமிரேட்ஸ் அணி கோப்பை வென்றது.
தற்போது, இதன் 4-ஆவது சீசன் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய நாளில் (டிச.2) தொடங்கி ஜன. 4ஆம் தேதி முடிவடைகின்றன.
இந்தத் தொடரில் 6 அணிகள் பங்கேற்கின்றன. பொதுவாக இந்தப் போட்டிகள் ஜனவரி - பிப்ரவரி வரை நடைபெறும்.
அடுத்தாண்டு டி20 உலகக் கோப்பை போட்டிகள் பிப். - மார்ச் மாதம் வரவிருப்பதால் ஐஎல்டி20 போட்டிகள் முன்னதாகவே நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சீசனில் விருது வென்றவர்கள்
ரெட் பெல்ட் - மதிப்பு மிக்க வீரர் - சாம் கரண் (252.5 புள்ளிகள்)
கிரீன் பெல்ட் - அதிக ரன்கள் - சாய் ஹோப் (527 ரன்கள்)
ஒயிட் பெல்ட் - அதிக விக்கெட்டுகள் - ஃபசல்லாஹ் ஃபருக்கி (21 )
ப்ளூ பெல்ட் - சிறந்த யுஏஇ வீரர் - முகமது வசீம்
ANNOUNCEMENT
— International League T20 (@ILT20Official) May 14, 2025
Epic is back!
Mark your calendars, for #DPWorldILT20 is back!
Season 4 of UAE's electrifying T20 league returns for its fourth edition on December 2, 2025!
Can’t wait to see you in the stands SOON! #AllInForCricket
Read More:… pic.twitter.com/ITSWpo1C8Q