ராமநாதபுரம் கலைஞர் மு.கருணாநிதி புதிய பேருந்து நிலையம்; இரவோடு இரவாக பெயர் சூட்ட...
கேரளத்தில் முதல்முறை... வரலாறு படைத்த லோகா!
நடிகை கல்யாணி ப்ரியதர்ஷனின் லோகா திரைப்படம் கேரளத்தில் புதிய வரலாறு படைத்துள்ளது.
துல்கர் சல்மான் தயாரிப்பில் டோமினிக் அருண் இயக்கிய லோகா சேப்டர்: சந்திரா திரைப்படம் கடந்த ஆக.28ஆம் தேதி வெளியானது.
உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தினால் துல்கரின் புதிய படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.
நடிகர் மோகன்லாலின் இருதயபூர்வம் படத்தின் வசூலையும் லோகா முறியடித்தது. இதுவரை, சுமார் ரூ.177 கோடி வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இந்தப் படம் கேரளத்தில் முதல்முறையாக 50,000 காட்சிகளைத் தாண்டிய திரைப்படமாக வரலாறு படைத்துள்ளது.

லோகா படத்தின் போஸ்டர்.இதன் இரண்டாம் பாகத்தில் நடிகர் டோவினோ தாமஸ் நடிப்பார் எனவும் கூறப்பட்டது. மொத்தம் ஐந்து பாகங்கள் உருவாகும் எனவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து ஆறாவது வாரமாக, 225-க்கும் அதிகமான திரைகளில் லோகா திரையிடப்பட்டு வருகிறதென படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.