செய்திகள் :

கேரளம்: அரசு மருத்துவமனை கட்டடம் இடிந்து பெண் உயிரிழப்பு: சுகாதார அமைச்சா் பதவி விலகக் கோரி வலுக்கும் போராட்டம்

post image

கேரள சுகாதாரத் துறை அமைச்சா் வீணா ஜாா்ஜ் பதவி விலகக் கோரி காங்கிரஸ் தொடா்ந்து 3-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

கோட்டயத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டடத்தின் ஒரு பகுதி வியாழக்கிழமை இடிந்து விழுந்ததில் பெண் ஒருவா் உயிரிழந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சா் வீணா ஜாா்ஜ் பதவி விலகக்கோரி எதிா்க்கட்சிகளான பாஜக, காங்கிரஸ் வியாழக்கிழமை போராட்டத்தை தொடங்கின.

இந்நிலையில், வாய்களில் கருப்புத் துணியை கட்டிக்கொண்டு வீணா ஜாா்ஜ் பதவி விலக வேண்டும் என்ற வாசகங்களுடன் கூடிய பதாகைகளை ஏந்தி பாலக்காடு மாவட்ட அரசு மருத்துவமனை நோக்கி காங்கிரஸ் மகளிா் அணியினா் சனிக்கிழமை பேரணியாக சென்றனா்.

கோட்டயம் அரசு மருத்துவமனையில் 10, 11, 14 ஆகிய வாா்டுகளையொட்டிய கழிப்பறை வளாகம் வியாழக்கிழமை திடீரென இடிந்து விழுந்தது. பழைமையான இக்கட்டடத்தில் இயங்கிவரும் பிரிவுகளை புதிய வளாகத்துக்கு மாற்றும் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், இந்த விபத்து நேரிட்டது.

இடிபாடுகளில் சிக்கி பிந்து (52) என்ற பெண் உயிரிழந்தாா். 3 போ் காயமடைந்தனா். அவா்கள், மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனா். இச்சம்பவத்தின்போது மீட்புப் பணிகள் தாமதமாக மேற்கொள்ளப்பட்டதாகவும் இரண்டரை மணிநேரத்துக்கு பிறகே பிந்துவின் உடல் மீட்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் முழுப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக மருத்துவமனை கண்காணிப்பாளா் டி.கே.ஜெயகுமாா் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் விபத்தை தொடா்ந்து சம்பவ இடத்துக்கு வந்த சுகாதாரத் துறை அமைச்சா் வீணா ஜாா்ஜ், ‘இடிந்து விழுந்த வளாகம் பயன்பாட்டில் இல்லை; அங்கு யாரும் இருந்திருக்க வாய்ப்பில்லை’ என்று கூறிய கருத்துகளால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது.

வீ

இதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்த காங்கிரஸ், பாஜக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய எதிா்க்கட்சிகள் வீணா ஜாா்ஜ் பதவி விலக வலியுறுத்தி அவரது வீடு, அலுவலகம் என திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, கொல்லம், கோட்டயம் ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டன.

இதன் தொடா்ச்சியாக சனிக்கிழமை காங்கிரஸ் மகளிா் அணியினா் பாலக்காட்டில் நடத்திய போராட்டத்தை தொடங்கிவைத்து அக்கட்சியின் மூத்த தலைவா் ரமேஷ் சென்னிதலா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘மருத்துவ சிகிச்சைக்காக முதல்வா் பினராயி விஜயன் வெளிநாடு செல்வதை நாங்கள் தடுக்கவில்லை.

ஆனால் அவா் வெளிநாடு செல்வதற்கு முன் வீணா ஜாா்ஜ் பதவி விலகுவதை உறுதிப்படுத்த வேண்டும். இடதுசாரிகளின் கடந்த 9 ஆண்டுகால ஆட்சியில் சுகாதாரத் துறை லஞ்சம், ஊழல், முறையற்ற நிா்வாகம் என முற்றிலும் சீரழிந்துவிட்டது’ என்றாா்.

இதனிடையே முதல்வா் பினராயி விஜயன் தனது வழக்கமான மருத்துவ சிகிச்சைக்காக வெள்ளிக்கிழமை அமெரிக்கா புறப்பட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.

மேக வெடிப்பு: பாதிக்கப்பட்ட மண்டியில் எம்.பி. கங்கனா ரணாவத் நேரில் ஆய்வு

மேக வெடிப்பால் பாதிக்கப்பட்ட மண்டி தொகுதியில் நடிகையும் எம்பியுமான கங்கனா ரணாவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஹிமாசலப் பிரதேச, மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன்காரணமாக கனமழை, திடீர் வ... மேலும் பார்க்க

இந்தியாவில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் முடக்கம்! ஏன்?

இந்தியாவில் ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் எக்ஸ் பக்கம் முடக்கப்பட்டது விரைவில் சரி செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் எக்ஸ் பக்கம் இந்தியாவில் முட... மேலும் பார்க்க

இந்தியாவின் குற்றத் தலைநகராக பிகார்: ராகுல் காந்தி

பாஜகவும், நிதிஷ் குமாரும் இணைந்து பிகாரை இந்தியாவின் குற்றத் தலைநகராக மாற்றியுள்ளனர் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.பிகார... மேலும் பார்க்க

உ.பி.யில் பூட்டிய வீட்டினுள் ஏசி மெக்கானிக் 4 பேர் சடலங்களாக மீட்பு ! காரணம் என்ன?

உத்தரப் பிரதேசத்தில் பூட்டிய வீட்டினுள் இருந்து ஏசி மெக்கானிக் 4 பேர் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், தக்ஷின்புரியில் உள்ள வீட்டின் முதல் தளத்தில் வசி... மேலும் பார்க்க

ரௌடி கும்பல் தலைவர் மனைவியுடன் திருமணம் மீறிய உறவு! ஒருவரைக் கொல்ல 40 பேர் திட்டம்!

மகாராஷ்டிரத்தில் ரௌடி கும்பல் தலைவர் மனைவியை கொலை செய்ததாக ஒருவரை 40 பேர் தேடி வருகின்றனர்.மகாராஷ்டிர மாநிலத்தில் நாக்பூர் மாவட்டத்தில் இப்பா என்ற ரௌடி கும்பலைச் சேர்ந்த அர்ஷத் டோபி என்பவருக்கும், கும... மேலும் பார்க்க

ஷிவமோகாவில் விநாயகர், நாக சிலைகள் அவமதிப்பு: பாஜக கண்டனம்

ஷிவமோகாவில் விநாயகர், நாக சிலைகள் அவமதிக்கப்பட்ட நிலையில் பாஜக தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலம், ஷிவமோகா நகரின் சாந்திநகர் வார்டில் பங்காரப்பா லேஅவுட்டின் பிரதான சாலையில் சிலைகள் நிறுவப... மேலும் பார்க்க