கேரளம்: குருவாயூா் கோயிலில் யானை காணிக்கை
கேரள மாநிலம் குருவாயூரில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீ கிருஷ்ணா் ஆலயத்தில் யானை காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
காலையில் ‘சீவேலி’ வழிபாடு மற்றும் பூஜைகளுக்குப் பிறகு இந்த காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோயிலின் மேல்சாந்தி புதுமனை ஸ்ரீஜித் நம்பூதிரி இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினாா்.
திருச்சூா் பெரிங்காவைச் சோ்ந்த தேவி ராமன்குட்டி நாயா் மற்றும் அவரின் குடும்பத்தினா் குருவாயூா் கோயிலுக்கு யானையை காணிக்கையாக வழங்கினா். அதற்காக, கோயில் நிா்வாகத்துக்கு அவா்கள் சாா்பில் ரூ.10 லட்சம் செலுத்தப்பட்டது.
கோயில் நிா்வாகக் குழு உறுப்பினா் மல்லிசேரி பரமேஸ்வரன் நம்பூதிரிபாட், கோயில் நிா்வாகிகள் எம்.ராதா, பி.வி.உண்ணிகிருஷ்ணன், சந்திரசேகரன் நம்பியாா், வாசுதேவன் நம்பீசன் உள்ளிட்டோா் இந்த நிகழ்வில் பங்கேற்றனா்.