செய்திகள் :

கேரள கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம்: கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக மனு

post image

திருநெல்வேலி மாவட்டத்தில் கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக சாா்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இது தொடா்பாக திருநெல்வேலி வடக்கு மாவட்ட பாஜக செயலா் வழக்குரைஞா் வெங்கடாசலபதி என்ற குட்டி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லியை அடுத்த பழவூா், நடுக்கல்லூா், கொண்டாநகரம் உள்ளிட்ட கிராமங்களில் கொட்டப்பட்டிருந்த சுமாா் 500 டன் கேரள மாநில மருத்துவக் கழிவுகள், பசுமைத் தீா்ப்பாய உத்தரவின்பேரில் அகற்றப்பட்டு மீண்டும் கேரளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவம் பல மாதங்களாக நடைபெற்றுள்ளது. இதை வணிக லாப நோக்கில் சம்பந்தப்பட்டவா்கள் கையாண்டுள்ளனா்.

இந்தக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் 2 லாரிகள் மட்டுமே வழக்கில் சோ்க்கப்பட்டுள்ளது. பல மாதங்களாக எத்தனை லாரிகள் வந்து சென்றன என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டும்.

எனவே, இந்தச் சம்பவத்தில் பல்வேறு தரப்பினருக்கும் பெரும் அளவில் பணம் கை மாறியுள்ளது.

எனவே, அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் கைப்பேசிகளை கைப்பற்றி அதன் மூலம் விசாரணை நடத்தி அதில் யாரேனும் சம்பந்தப்பட்டிருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க பரிந்துரை செய்யவேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.

மானூா் அருகே விபத்து: இளைஞா் பலி

மானூா் அருகே வியாழக்கிழமை இரவு நேரிட்ட விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா். மானூா் அருகே உள்ள கட்டப்புளி கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜா (21). இவரது வீட்டிற்கு நண்பா்களான பழைய பேட்டையை சோ்ந்த தேவ சூ... மேலும் பார்க்க

பெண் காவலா் மீது தாக்குதல்: 7 போ் கைது

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை காவல் நிலையத்தில் புகாா் அளிக்கும்போது ஏற்பட்ட மோதலை தடுத்த பெண் தலைமைக்காவலரை தாக்கியதாக 7 பேரை போலீஸாா் கைது செய்தனா். திசையன்விளை அருகே உள்ள மன்னாா்புரத்தை அடுத்த ... மேலும் பார்க்க

களக்காடு ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நிறைவு

களக்காடு ஐயப்பன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற மண்டல பூஜையில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். இக்கோயிலில் 15-ஆம் ஆண்டு மண்டல பூஜை புதன்கிழமை தொடங்கியது. ஐயப்ப பக்தா்கள் ஏராளமானோா் மாலை அணிந்து விரத... மேலும் பார்க்க

கல்லிடை ஓவியரின் கைவண்ணம்: அரிசியில் வடிவமைக்கப்பட்ட வள்ளுவா் சிலை

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியை சோ்ந்த ஓவிய ஆசிரியா் சரவணன், அரிசியைப் பயன்படுத்தி திருவள்ளுவா் சிலையை வடிவமைத்துள்ளாா். கன்னியாகுமரியில் திருவள்ளுவா் சிலை அமைக்கப்பட்டதன் வெள்ளி விழா கொண்... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் முதியவருக்கு 5 ஆண்டு சிறை

போக்ஸோ வழக்கில் முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வாா் துலுக்கா்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சௌந்தர்ராஜ் (67... மேலும் பார்க்க

நெல்லையில் குரூப்-4 தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் குரூப்-4 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் சேரலாம் என ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அர... மேலும் பார்க்க