செய்திகள் :

கே.எல்.ராகுல் ஆட்டமிழப்பில் சர்ச்சை..! நடுவரை சாடும் இந்தியர்கள்!

post image

ஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்தியாவின் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் ஆட்டமிழப்பு குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.

பெர்த் மைதானத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டி இன்று காலை தொடங்கியது. கேப்டன் ரோஹித் சர்மா முதல் போட்டியில் பங்கேற்காத நிலையில், பும்ரா தலைமையில் இந்திய அணி களமிறங்கியுள்ளது.

 இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்டர்கள் வரிசையாக அவுட்டாகியுள்ளனர்.

இதில் சிறப்பாக விளையாடிவந்த கே.எல்.ராகுல் ஆட்டமிழந்தது நடுவரின் தவறான முடிவென இந்திய ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

22.2 ஆவது ஓவரில் மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்தில் கே.எல்.ராகுல் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழப்பார். கள நடுவர் அவுட் கொடுக்காமல் டிஆர்எஸ் எடுத்து மூன்றாம் நடுவர் கொடுத்த விக்கெட். இதில் ராகுல் பேட்டில் பந்து படவில்லை, காலுறையில் பேட் படும் சப்தம்தான் அது என ரசிகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

ஹைடன், “பேட்டை பந்து கடக்கும்போது பேட்டுடன் (Bat) காலில் கட்டப்பட்டுள்ள பேட் (pad)தொடவில்லை. அதனால் அது நிச்சயமாக பேட்டில்தான் (bat) பட்டிருக்கும்” என்றார்.

முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா, “இது என்ன மாதிரியான முடிவு? இது நகைச்சுவை அல்ல” எனக் கோபமாக கூறியுள்ளார்.

“பொறுத்திருந்து பார்ப்போம்...” ஐபிஎல் மெகா ஏலம் குறித்து ஜோஸ் பட்லர்!

ஐபிஎல் மெகா ஏலம் குறித்து இங்கிலாந்து அணியின் ஜோஸ் பட்லர் மனம் திறந்துள்ளார்.அபு தாபியில் நடைபெற்று வரும் டி10 கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் அதிரடியாக விளையாடி அசத்தினார். சென... மேலும் பார்க்க

கே.எல்.ராகுல் ஆட்டமிழப்பு சர்ச்சை; மிட்செல் ஸ்டார்க் கூறியதென்ன?

சர்ச்சைக்குள்ளான கே.எல்.ராகுலின் விக்கெட் குறித்து ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் பேசியுள்ளார்.கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்... மேலும் பார்க்க

பௌன்சர்களை தோளில் வாங்கிக்கொள்; கௌதம் கம்பீரின் அறிவுரையை நினைவுகூர்ந்த நிதீஷ் குமார் ரெட்டி!

பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் தொடங்குவற்கு முன்பாக கௌதம் கம்பீர் கொடுத்த அறிவுரையை அறிமுக வீரர் நிதீஷ் குமார் ரெட்டி நினைவு கூர்ந்துள்ளார்.கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த இந்... மேலும் பார்க்க

“உலகின் சிறந்த வீரர்...” ஜஸ்பிரித் பும்ராவை பாராட்டிய முன்னாள் வேகப் பந்துவீச்சாளர்!

உலகின் சிறந்த வீரர் ஜஸ்பிரித் பும்ரா என முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் அவரைப் பாராட்டியுள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பெர்த்தில் இ... மேலும் பார்க்க

முதல் டெஸ்ட்: பிளேயிங் லெவனை அறிவித்த மே.இ.தீவுகள்!

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.வங்கதேச அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் ... மேலும் பார்க்க

நியூசி. அணி நன்றாக விளையாடியது; இலங்கை தலைமைப் பயிற்சியாளர் பாராட்டு!

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய நியூசிலாந்து அணி சிறப்பாக விளையாடியதாக இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யா பாராட்டியுள்ளார்.நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்க... மேலும் பார்க்க