செய்திகள் :

``கொடநாட்டில் CCTV-ஐ ஆஃப் செய்ய சொன்ன 'Sir' யார்?" - ஓ.பி.எஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் கேள்வி!

post image

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் தொந்தரவு சம்பவத்தில் கைதாகி உள்ள ஞானசேகரன் போனில் யாருடனோ 'சார்' என்று பேசினார் என்று பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அப்போதிருந்து 'யார் அந்த சார்?' என்ற கேள்வி தமிழ்நாடு முழுவதும் பரபரப்பாக கேட்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை, சிறப்பு விசாரணைக் குழுவிலும் மாணவி ஞானசேகரன் சாரிடம் பேசியதாக மீண்டும் உறுதி செய்தார்.

'யார் அந்த சார்? என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்' என்று பல்வேறு அரசியல் தலைவர்கள் குரல் கொடுத்தும், போராட்டம் நடத்தியும் வருகின்றனர். இன்று சட்டசபைக்கு வந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக சட்டசபை உறுப்பினர்கள் அனைவரும் தங்களது சட்டையில் 'யார் அந்த சார்?' என்று ஸ்டிக்கருடன் வந்திருந்தனர். மேலும், சட்டசபை தொடக்கத்திலேயே 'யார் அந்த சார்?' என்று முழுக்கமிட்டதால் வெளியேற்றப்பட்டனர்.

இந்த நிலையில், ஓ.பி.எஸ் ஆதரவாளரான மருது அழகுராஜ் தனது பேஸ்புக் பக்கத்தில், "கொடநாடு CCTV-ஐ ஆஃப் பண்ணச் சொன்ன அந்த sir யாருங்கிறதையும் கேளுங்கப்பா..." என்று பதிவிட்டுள்ளார்.

கொடநாடு வழக்கில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் பெயர் அடிப்பட்டு வருவது அனைவரும் தெரிந்த விஷயமே. இன்று, அவர் சட்டசபையில் 'யார் அந்த சார்?' என்ற முழக்கமிட்ட நிலையில், இப்போது மருது அழகுராஜின் பதிவு வைரலாகி வருகிறது.

Seeman : `உடல் இச்சை ஏற்பட்டால்...' - பெரியாரை மேற்கோள்காட்டி சீமான் உண்டாக்கிய சர்ச்சை

கடலூரில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டத்தை முடித்துவிட்டு பத்திரிகையாளர்களை அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்திருந்தார். அப்போது, பெரியாரை மேற்கோள்காட்டி அவர் பேசிய சில விஷயங... மேலும் பார்க்க

DMK Vs Congress: ஈரோடு கிழக்கு யாருக்கு? | ஆளுநரை கோத்துவிடும் DMK கூட்டணி கட்சிகள்?- Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* - பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்து அதிமுக எம்எல்ஏக்கள் இன்று 'யார் சார் அது?' பேட்ஜ்!* - இரண்டாவது நாளாக EPS இல்லை... ஏன்?* - அண்ணா பல்கலைக்கழக விவகாரம் - பேரவையில் கவன ... மேலும் பார்க்க

திமுக செயல்பாடுகள் : எதிர்க்கும் தோழமைகள் - நெருக்கடியில் ஸ்டாலின்?

எதிர்க்கும் தோழர்கள்:`அறிவிக்கப்படாத அவசரநிலை உள்ளதா?’ மார்க்சிஸ்ட் கட்சியினர் கடந்த சில மாதங்களாகவே ஆளும் அரசைக் கடுமையாக விமர்சித்து வந்தனர். அதிலும், சாம்சங் தொழிற்சாலை விவகாரத்திலிருந்து விமர்சனம்... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : `மீண்டும் ஈ.வி.கே.எஸ் குடும்பமா?’ காங்கிரஸ் வேட்பாளர் ரேஸில் யார் யார்?

ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ-வாக இருந்த திருமகன் ஈவேரா காலமானதையடுத்து இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, கடந்த 14.12.20... மேலும் பார்க்க