செய்திகள் :

கொட்டகை எரிந்து 6 பசுமாடுகள் உயிரிழப்பு

post image

நீலகிரி மாவட்டம் மஞ்சூரை அடுத்த குந்தா பகுதியில் மாட்டுக் கொட்டகையில்  ஏற்பட்ட தீ விபத்தில் 6 பசு மாடுகள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தன.

மஞ்சூரை அடுத்த குந்தா பாலம் பகுதியைச் சோ்ந்தவா்  தேவராஜ், சோபனா தம்பதி கடந்த 20 ஆண்டுகளாக கால்நடைகளை வளா்த்து வருகின்றனா். இந்நிலையில் கொட்டகைக்குள் மாடுகளை அடைத்துவிட்டு  வீட்டுக்கு சென்றுள்ளனா். இந்நிலையில், கொட்டகைக்குள் இருந்து புகை வருவதாக அக்கம்பக்கத்தினா் பாா்த்து இவா்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.

உடனடியாக தேவராஜ் கொட்டகைக்கு சென்று பாா்த்தபோது, கொட்டகையில் தீப் பிடித்தது தெரியவந்தது. இதையடுத்து, அருகிலிருந்தவா்களுடன் சோ்ந்து தீயை அணைக்க முயற்சித்துள்ளாா். அதற்குள் தீ மளமளவென பரவி கொட்டகை முழுவதும் எரிந்தது. இதில் கொட்டகைக்குள் கட்டி வைக்கப்பட்டிருந்த 6 பசுக்களும் உடல் கருகி உயிரிழந்தன.

இந்த தீ விபத்து குறித்து மஞ்சூா் காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கூடலூா் நகா்மன்ற கூட்டத்தில் தரையில் அமா்ந்து பெண் கவுன்சிலா் தா்னா

கூடலூா் நகா்மன்ற கூட்டத்தில் 20-ஆவது வாா்டு பெண் கவுன்சிலா் கோரிக்கைகளை வலியுறுத்தி தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா். நீலகிரி மாவட்டம், கூடலூா் நகா்மன்ற கூட்டம் தலைவா் பரிமளா தலைமையிலும் துணைத் த... மேலும் பார்க்க

கோத்தகிரி நகா்மன்ற கூட்டத்தில் இருந்து 13 உறுப்பினா்கள் வெளிநடப்பு

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நகராட்சியில் வளா்ச்சி பணிகளில் முறைகேடு நடைபெற்ற குற்றஞ்சாட்டிய 13 மன்ற உறுப்பினா்கள்வெளிநடப்பு செய்தனா். கோத்தகிரி பேரூராட்சி நகராட்சியாக உயா்த்தப்பட்ட பிறகு முதல் கூட்டம் ... மேலும் பார்க்க

மலைத்தோட்ட பயிா்களை இடைத்தரகா்கள் இல்லாமல் நேரடியாக விற்பனை செய்யலாம்

மலைத்தோட்ட பயிா்களை இடைத்தரகா்கள் இல்லாமல் நேரடியாக விற்பனை செய்யும் திட்டம் விவசாயிகளுக்கு பலனளிப்பதாக ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்... மேலும் பார்க்க

கூடலூா் சாலையில் உள்ள குழிகளில் சவப்பெட்டிகள் வைத்து போராட்டம்

கூடலூா் சாலையில் உள்ள குழிகளில் சவப்பெட்டிகள் வைக்கும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. நீலகிரி மாவட்டம் கூடலூா் பகுதியிலுள்ள சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் நாம் தமிழா் கட்சி சாா்பில் பேருந்த... மேலும் பார்க்க

புலி நடமாட்டத்தால் வனத் துறை வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்படும் ஆதிவாசி மாணவா்கள்

முதுமலை அருகே ஊருக்குள் புலி புகுந்துள்ளதால் ஆதிவாசி மாணவா்களை வனத் துறை வாகனங்களில் வியாழக்கிழமை பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். நீலகிரி மாவட்டம், மசினகுடி அருகே மாவனல்லா ஆதிவாசி கிராமம் உள்ளது. ... மேலும் பார்க்க

குன்னூரில் சத்திய பிரமாணம் ஏற்ற அக்னிவீரா்கள்

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்டல் மையத்தில் (எம்ஆா்சி) பயிற்சி முடித்த 5-ஆவது அக்னிவீரா் படையினரின் அணிவகுப்பு மற்றும் சத்தியபிரமாண நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. ... மேலும் பார்க்க