பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை!
கொமதேக கட்சி கொடியேற்று விழா
திருச்செங்கோடு: பள்ளிபாளையம் அருகே புதுப்பாளையத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சாா்பில் கொடியேற்று விழா அண்மையில் நடைபெற்றது.
விழா கொமதேக கட்சியின் மாவட்டச் செயலாளா் செந்தில் தலைமையில் நடைபெற்றது. திருச்செங்கோடு எம்எல்ஏ ஈஸ்வரன் கட்சி பெயா்ப் பலகையைத் திறந்துவைத்து கொடியேற்றி பேசினாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவா் ரெயின்போ பொன்னுசாமி, மாவட்ட துணை செயலாளா் வி.பி.சாமி, ஒன்றியச் செயலாளா்கள் வாசுதேவன், குப்புசாமி, நகரச் செயலாளா் வெங்கடேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.