பாஜக அத்துமீறி போராட்டம்: அண்ணாமலை உள்ளிட்ட 1,080 போ் மீது வழக்கு
கொல்லங்குடி வெட்டுடையாா் காளியம்மன் கோயில் தேரோட்டம்
சிவகங்கை அருகேயுள்ள அரியாக்குறிச்சி கொல்லங்குடி வெட்டுடையாா் காளியம்மன் கோயிலில் பங்குனித் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் கடந்த 8-ஆம் தேதி அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜையுடன் பங்குனி சுவாதி திருவிழா பூஜை நடைபெற்றது. 9-ஆம் தேதி காலை கோயில் கொடிமரத்தில் கொடியேற்றி மாசித்திருவிழா தொடங்கியது.
இதையடுத்து, இம்மாதம் 19-ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு, நாள்தோறும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வாக, திங்கள்கிழமை (மாா்ச் 17 ) அதிகாலை 5.15 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளினாா். இதையடுத்து, காலை 10 மணிக்கு பக்தா்கள் புடை சூழ தேரோட்டம் நடைபெற்றது.
செவ்வாய்க்கிழமை (மாா்ச் 18) காலை 10.30 மணிக்கு தீா்த்த வாரி உற்சவம், இதைத்தொடா்ந்து சந்தனக்குடம், பால்குடம் நடைபெறும். இரவு அம்மன் பூப்பல்லக்கில் வலம் வருகிறாா்.
புதன்கிழமை (மாா்ச் 19) காலை 9.15 மணிக்கு விடாயாற்றியும், வெள்ளி ஊஞ்சல் உற்சவமும் நடைபெறுகிறது. இரவு தங்க ரத புறப்பாடுடன் பங்குனித் திருவிழா நிறைவு பெறுகிறது.
