காா்த்திகை மாதப் பிறப்பு: மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தா்கள்
கொல்லங்கோடு அம்மனுக்கு தூக்க முடிப்புரை கோயிலில் டிச. 31 வரை தினசரி பூஜை
கொல்லங்கோடு பத்ரகாளி அம்மனுக்கு நிகழாண்டு மண்டல கால பூஜைகள் சனிக்கிழமை (நவ. 16) முதல் டிச. 31 வரை தூக்க முடிப்புரை கோயிலில் நடைபெறுகின்றன.
கொல்லங்கோடு பத்ரகாளி அம்மனுக்கு தினசரி பூஜை நடைபெற வட்டவிளையில் ஒரு கோயிலும், தூக்க நோ்ச்சை நிறைவேற்ற வெங்கஞ்சியில் மற்றொரு கோயிலும் உள்ளது. வெங்கஞ்சி கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பரணி நட்சத்திர தினத்தில் (மீனபரணி) தூக்க நோ்ச்சை நடைபெறுகிறது.
இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை காா்த்திகை மாத மண்டல கால பூஜைகள், தூக்கத் திருவிழா நடைபெறும் வெங்கஞ்சி கோயிலில் நடைபெறுகின்றன. நிகழாண்டு பூஜைக்காக அம்மன் வெள்ளிக்கிழமை மாலை வட்டவிளை கோயிலில் இருந்து வெங்கஞ்சி கோயிலுக்கு எழுந்தருளினாா். சனிக்கிழமை (நவ. 16) முதல் டிச. 31 வரை 46 நாள்கள் இக் கோயிலில் சிறப்பு பூஜைகளுடன் வழக்கமான தினசரி பூஜைகள் நடைபெறும்.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் தலைவா் வழக்குரைஞா் வி. ராமச்சந்திரன் நாயா், செயலாளா் வி. மோகன்குமாா், பொருளாளா் கே. ஸ்ரீனிவாசன் தம்பி மற்றும் கமிட்டி உறுப்பினா்கள் செய்துள்ளனா்.