கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோவிலில் குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை வழிபாடு! | Photo Album
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு ஸ்ரீபத்திரகாளி அம்மன் கோயிலில் குழந்தைகள் நலமுடன் வாழவேண்டி மீன பரணி தினமான இன்று தூக்க நேர்ச்சை வழிபாடு நடைபெற்றது.
இதில் 1175 குழந்தைகளை நேர்த்திகடனுக்காக சுமார் 40 அடி உயரத்தில் தூக்கியபடி கோயிலைச் சுற்றி வலம் வந்தனர். குழந்தை வரம் வேண்டி அம்மன் அருளால் பிறந்த குழந்தைகளுக்கும், குழந்தைகள் நலமுடன் வாழவும் இந்த நேர்ச்சை வழிபாட்டை நடத்துகின்றனர். ஆண்டுதோறும் இந்த வித்தியாசமான வழிபாடு நடைபெற்று வருகிறது.






































