நத்தம் மாரியம்மன் கோயில் மாசி விழா: பூப்பல்லக்கில் அம்மன் நகர்வலம்; விடிய விடிய பக்தர்கள் தரிசனம்
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா மார்ச் 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நத்தம் பகுதி மட்டுமல்லாது சுற்றுவட்டார மக்கள் உலுப்பகுடி அருகே கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் நீராடி மஞ்சள் ஆடைகள் அணிந்து காப்புக்கட்டி 15 நாள்கள் விரதத்தைத் தொடங்கினர்.

கடந்த வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் இரவில் மாரியம்மன் மயில், சிம்மம், அன்னம் போன்ற வாகனங்களில் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி நகர்வலம் வந்தார். பக்தர்கள் நேர்த்திக் கடனாகப் பால், சந்தனம், தேன் குடங்களை எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். மேலும், மாரியம்மனுக்கு மஞ்சள் திருப்பாவாடை ஊர்வலமாக எடுத்து வந்து காணிக்கையாகச் செலுத்தப்பட்டது.
விழாவில் அம்மனுக்கு அக்னிசட்டி எடுத்தல், அலகு வேல் குத்தி வருதல், பால்குடம், மாறுவேடம் அணிந்து வருதல், மாவிளக்கு, கரும்பு தொட்டில், அரண்மனை பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நேர்த்திக் கடன்கள் செலுத்தப்பட்டன. விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்கப் பக்தர்கள் புனித நீராடிவிட்டு பூக்குழி முன் வரிசையில் வந்து நின்றனர். சிறுவர் முதல் பெரியவர்கள் வரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

நேற்று முன்தினம் அம்மன் மஞ்சள் நீராட்டுதல் நிகழ்ச்சியைத் தொடர்ந்து இரவு பல்வேறு வண்ணப்பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் காமாட்சி அலங்காரத்தில் அம்மன் நகர்வலம் வந்தார். அம்மன் குளத்திலிருந்து புறப்பட்ட பல்லக்கு முக்கிய வீதிகள் வழியாக வந்தது. விடிய விடிய நடந்த இந்நிகழ்வில் வழிநெடுகிலும் மண்டகப்படிகளில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். காந்திநகர் பொதுமக்கள் சார்பில் கழுமரம் ஊன்றப்பட்டு கழுமரம் ஏறும் போட்டி நடத்தப்பட்டது.
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks