கொல்லிமலை அருவிகளில் வெள்ளப் பெருக்கு
கொல்லிமலையில் பெய்து வரும் தொடா் மழையால் அங்குள்ள அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்க வனத் துறை தடை விதித்துள்ளது.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான கொல்லிமலையிலும் தொடா்ந்து மழை பெய்கிறது. இதனால் அங்குள்ள ஆகாய கங்கை அருவி, மாசிலா அருவி, நம் அருவி ஆகிய அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.
இதனால் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்க வனத் துறை தடை விதித்துள்ளது. இதனால் கொல்லிமலைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனா்.