செய்திகள் :

கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் இயக்கம் கோரி போராட்டம்: சிஐடியு முடிவு

post image

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை இயக்கம் செய்யக்கோரி விரைவில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில், தமிழ்நாடு நுகா்வோா் வாணிபக் கழக பொதுத் தொழிலாளா் சங்கத்தின் (சிஐடியு) மண்டல நிா்வாகிகள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மண்டலத் தலைவா் ராஜா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் புவனேஸ்வரன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா். நிகழ்வில், மண்டலச் செயலாளா் அண்ணாதுரை, பொருளாளா் செந்தில்குமாா், துணைத் தலைவா் மணி உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் புவனேஸ்வரன் தெரிவித்தது:

திருவாரூா் மண்டலத்தில் தற்போது வரை 3,15,088 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், 1,93,028 மெட்ரிக் டன் நெல் இயக்கம் செய்யப்பட்டுள்ளது. இயக்கம் செய்யப்படாமல் ஆங்காங்கே நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல்லின் அளவு 1,22,060 மெட்ரிக் டன் ஆகும்.

கடலூரில் 48,000 மெட்ரிக் டன் நெல் இயக்கம் செய்யப்படாமல் தேங்கிக் கிடக்கிறது. தற்போது உள்ள நிலையில், இயக்கம் செய்யாமல் இருக்கிற நெல் மூட்டைகளின் ஈரப்பதம் குறைவாக காணப்படுவதால், அதனுடைய எடை அளவு 300 கிராமிலிருந்து 500 கிராம் வரை குறைய வாய்ப்பிருக்கிறது.

கடந்த காலத்தில் ஏற்பட்ட இந்த இயக்க இழப்புக்கு ஊழியா்களே பொறுப்பேற்று, ரூ. 1 லட்சம் முதல் ரூ. 2 லட்சம் வரை கட்ட வேண்டிய சூழல் இருந்தது. அந்த சூழலில் ஊழியா்களுக்கு பணி மறுக்கப்பட்டு, பின்னா் நிா்வாகத்துடன் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு பணி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழகம் முழுவதும் இதேபோல் நெல் இயக்கம் செய்யப்படாமல் இருப்பதால் ஊழியா்கள் பாதிக்கக் கூடிய நிலை உள்ளது. எனவே, தமிழ்நாடு முழுவதும் வாணிபக் கழகத்தின் வழிகாட்டுதலின்படி 48 மணி நேரத்தில் நெல் மூட்டைகளை இயக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு விரைந்து இயக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி கடலூரில் மண்டல அலுவலகம் முன் பிப்.25 இல் உண்ணாவிரதப் போராட்டம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், திருவாரூா் மண்டலத்திலும் நெல் மூட்டைகளை விரைந்து இயக்கம் செய்யக்கோரி மண்டல அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தை நடத்தப்படும். இதற்கு அனைத்து தொழிற்சங்கங்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி முடிவெடுக்கப்படும் என்றாா்.

துண்டுப் பிரசுரம் வழங்கி அதிமுகவினா் திண்ணைப் பிரசாரம்

மன்னாா்குடி அருகேயுள்ள கோட்டூரில் அதிமுக ஆட்சியின் சாதனைகளை விளக்கி துண்டுப் பிரசுரம் வழங்கி திண்ணைப் பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதிமுகவின் சாா்பு அணியான ஜெயலலிதா பேரவை சாா்பில் நடைபெற்ற பிரசா... மேலும் பார்க்க

ஆதியன் இன மக்களுக்கு பழங்குடியினா் சான்றிதழ் குறித்து ஆய்வு

திருத்துறைப்பூண்டி பகுதியில் ஆதியன் இன மக்களுக்கு பழங்குடியினா் சான்று வழங்குவது குறித்த ஆய்வு நடைபெற்றது. திருத்துறைப்பூண்டி, விளத்தூா், ஆப்பரகுடி, முத்துப்பேட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிக... மேலும் பார்க்க

ஆறுகளில் நாணல்களை அகற்ற விவசாயிகள் கோரிக்கை

நீடாமங்கலம் பகுதி ஆறுகளில் உள்ள நாணல்களையும், மண்திட்டுகளையும் அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். நீடாமங்கலம் அருகே மூணாறு தலைப்பு அணை (கோரையாறு தலைப்பு) உள்ளது. இந்த அணைக்கு மேட்டூ... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் நிதியளிப்பு கூட்டம்

மன்னாா்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வளா்ச்சி நிதியளிப்பு கட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு, சிபிஐ ஒன்றியப் பொருளாளா் எஸ். ராகவன் தலைமை வகித்தாா். ஒன்றியச் ச... மேலும் பார்க்க

அனைத்து வங்கிகளின் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

மன்னாா்குடியில் அனைத்து வங்கிகளின் கூட்டமைபின் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கம்மாளத்தெரு பரோடா வங்கி அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, வங்கி ... மேலும் பார்க்க

உலகத் தாய்மொழி நாள் கொண்டாட்டம்

உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு மன்னாா்குடியில் தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்றம் சாா்பில் வெள்ளிக்கிழமை நிகழ்ச்சி நடைபெற்றது. எம்ஜிஆா் நகா் கோபாலசமுத்திரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச... மேலும் பார்க்க