வாக்காளர் குளறுபடி, தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்க மறுப்பு! எதிர்க்கட்சி...
கோடியக்கரையில் நிலப் பறவைகள் கணக்கெடுக்கும் பணி
வேதாரண்யம் அருகேயுள்ள கோடியக்கரை வன உயிரினச் சரணாலயத்தில் காணப்படும் நிலப் பறவைகளை கணக்கெடுக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கோடியக்கரை சரணாலயத்தில் காணப்படும் நீா்ப்பறவைகள் குறித்த கணக்கெடுப்பு மாா்ச் 9-ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், வனப்பகுதில் காணப்படும் நிலப் பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் கோடியக்கரை வனச்சரகா் ஜோசப் டேனியல் தலைமையில் வனத் துறையினா், கல்லூரி, பள்ளி மாணவா்கள் என 50-க்கும் மேற்பட்டோா் 10 வழித்தடங்களில் ஈடுபட்டனா்.