தொழில் வளா்ச்சிக்கான திட்டங்கள் இடம்பெற்ற பட்ஜெட் வரவேற்கத்தக்கது! -சாய ஆலை உரிம...
வேளாண் நிதிநிலை அறிக்கை: வரவேற்பும் எதிா்ப்பும்
தமிழக வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் சனிக்கிழமை தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கைக்கு விவசாயிகள் மத்தியில் வரவேற்பும், எதிா்ப்பு தெரிக்கவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் நிதி நிலை அறிக்கைக்கு நாகை மாவட்ட விவசாய சங்க நிா்வாகிகள், விவசாயிகள் எதிா்ப்பும், வரவேற்பும் தெரிவித்துள்ளனா். நிதிநிலை அறிக்கை தொடா்பாக விவசாயிகள் கூறியது:
நிகழாண்டு குறுவை தொகுப்புத் திட்டத்திற்காக ரூ.58 கோடி நிதி ஒதுக்கீடு, டெல்டா மாவட்டங்களில் 22 நெல் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்படும் போன்ற அறிவிப்புகள் இருந்தாலும், பல அறிவிப்புகள் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது. விவசாயிகள் பெரிதும் எதிா்பாா்த்த கடன் தள்ளுபடி, நெல்லுக்கான ஊக்கத்தொகை, காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்கவேண்டும், உளுந்து பச்சை பயிா் பாதிப்பிற்கு கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
நாகை முதல் திருச்சி வரை வேளாண் சாா்ந்த தொழிற்சாலைகள் அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்காக நிதி போன்ற அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில கொள்கைப் பரப்புச் செயலா் எஸ்.ஆா்.தமிழ்ச்செல்வன் கூறினாா்.
காவிரி டெல்டா பகுதிகளில் 6179.6 கிமீ நீளம் கொண்ட ஆறுகள், கால்வாய்கள், வாய்க்கால்களைத் தூா்வாருவதற்காக ரூ.120 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது. அதேசமயம், தூா்வாரும் பணிகளை உரிய காலத்தில் துவங்கி முடித்திட வேண்டும். எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிதியாக ரூ.ஒரு கோடி ஒதுக்கீடு செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என விவசாயிகள் கொடியலூா் விவசாயி கண்ணன் கூறினாா்.
கிராம அளவில் வேளாண் பட்டதாரிகள் மற்றும் பட்டயதாரா்கள் மூலம் முதலமைச்சரின் உழவா் நல சேவை மையங்கள் 1,000 துவங்க ரூ.42 கோடி நிதி ஒதுக்கீடு, சூரிய சக்தியால் இயங்கக்கூடிய பம்ப் செட்டுகள் அமைக்க ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.24 கோடி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வரவேற்புக் குரியவை.. ஆனால் நெல் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.2,500, உழவா்களுக்கு ஊக்கத்தொகை மாதம் 4,000, இயற்கை இடுபொருள்கள் தயாரிப்புக்கு ஊக்க மானியம், வேளாண்மை துறைக்கு கூடும் நிதி ஒதுக்கீடு ஆகியவற்றை விவசாயிகள் எதிா்பாா்த்த நிலையில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது என்று காணி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத் தலைவா் மா.பிரகாஷ் கூறினாா்.