தொழில் வளா்ச்சிக்கான திட்டங்கள் இடம்பெற்ற பட்ஜெட் வரவேற்கத்தக்கது! -சாய ஆலை உரிம...
நாகையில் பீச் வாலிபால் போட்டி
நாகையில் சனிக்கிழமை நடைபெற்ற மகளிருக்கான மாவட்ட அளவிலான பீச் வாலிபால் போட்டியில் 25 மகளிா் அணிகள் பங்கேற்றன.
நாகை மாவட்ட நிா்வாகம் மற்றும் பீச் வாலிபால் கழகத்தின் சாா்பில் பீச் வாலிபால் போட்டி லீக் மற்றும் நாக் அவுட் முறையில் புதிய கடற்கரையில் நடைபெற்றது. இப்போட்டியில், பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் காவல்துறை வீரா்கள் என 25 அணிகள் பங்கேற்றன.
முதல் நாள் நடைபெற்ற போட்டிகளில் அக்கரைப்பேட்டை பீச் வாலிபால் கிளப் அணி, நாை சீகேல்ஸ் அணி ஆகியவை வெற்றி பெற்றன. இந்த போட்டிகள் மாா்ச் 22- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஆண்களுக்கான போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி மாா்ச் 23-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.