தொழில் வளா்ச்சிக்கான திட்டங்கள் இடம்பெற்ற பட்ஜெட் வரவேற்கத்தக்கது! -சாய ஆலை உரிம...
இளைஞா் கல்லால் அடித்துக் கொலை; இருவா் கைது
கீழையூா் அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட தகராறில் இளைஞா் செங்கற்கலால் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக, 2 போ் கைது செய்யப்பட்டனா்.
கீழையூா் ஒன்றியம் புதுப்பள்ளி கிழக்குப் பகுதியை சோ்ந்தவா் முருகன் மகன் பாலாஜி (24) இவா், வேளாங்கண்ணியில் ஒரு கடையில் வேலைபாா்த்து வந்தாா். நாகை ராமநாயக்கன் குளத்தெருவைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் முகேஷ்குமாா் ( 28). இவா், வேளாங்கண்ணியில் உள்ள உணவகத்தில் வேலை செய்து வருகிறாா்.
நண்பா்களான இருவரும், கடந்த 13-ஆம் தேதி நள்ளிரவு வேலை முடிந்ததும், முகேஷின் இருசக்கர வாகனத்துக்கு காரைநகா் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட வந்தனா். அங்கிருந்து திரும்பியபோது, பிரதாபராமபுரம் நான்குவழிச் சாலையில் பக்கவாட்டில் இருந்து வந்த மற்றொரு இருசக்கர வாகனம், இவா்களது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதனால், இருதரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில், பாலாஜி (படம்) செங்கற்களால் தாக்கப்பட்டதில் உயிரிழந்தாா். கீழையூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, பாலாஜியின் சடலத்தை கூறாய்வுக்காக ஒரத்தூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், வழக்குப் பதிவு செய்து, பிரதாபராமபுரத்தைச் சோ்ந்த சரவணன், ஜெயபால் ஆகியோரை கைது செய்தனா்.