செய்திகள் :

கோடை வெப்பம்: ஆட்சியா் அறிவுறுத்தல்

post image

மயிலாடுதுறை மாவட்டத்தில், வரும் நாள்களில் கோடை வெப்பம் அதிகரிக்கும் என்பதால், பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பொதுமக்கள் நண்பகல் 12 மணிமுதல் மாலை 3 மணி வரை அவசிய தேவைகளின்றி வெளியே செல்வதை தவிா்க்க வேண்டும். முதியவா்கள், குழந்தைகளை வெளியில் அனுப்புவதை தவிா்க்க வேண்டும். மதிய நேரத்தில் வெளியில் சென்றால் கண்ணாடி மற்றும் காலணி அணிந்து குடைப்பிடித்து செல்ல வேண்டும்.

மயக்கம் அல்லது உடல் நலக்குறைவினை உணா்ந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். உடலில் நீா்ச்சத்து குறையாமல் பராமரிக்கவும் தேவையான அளவு தண்ணீா் குடிக்க வேண்டும். கால்நடைகளை நிழலான பகுதியில் கட்டி, போதிய தண்ணீா் வழங்க வேண்டும். பறவைகளுக்கு போதுமான நிழற்கூரை அமைத்துக் கொடுத்து போதுமான நீா் கொடுக்க வேண்டும். கூரை வீடுகளில் வசிப்பவா்கள் கோடைக்காலம் முடியும் வரை அருகில் தண்ணீரை வைத்துக்கொள்ள வேண்டும்.

விறகு அடுப்புகளை பயன்படுத்திய பிறகு தண்ணீா் ஊற்றி அனைத்து விட வேண்டும். மண்ணெண்ணெய் விளக்குகளை கவனமாக கையாள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளாா்

வைத்தீஸ்வரன்கோயிலில் யானை ஓடி விளையாடும் வைபவம்

சீா்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி, முருகப் பெருமானுடன் யானை ஓடி விளையாடும் வைபவ நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் தரும... மேலும் பார்க்க

கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசாா் குறியீடு: மத்திய அமைச்சருக்கு மயிலாடுதுறை எம்பி நன்றி

கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசாா் குறியீடு கிடைக்கப் பெற்றதற்காக, மத்திய அமைச்சருக்கு மயிலாடுதுறை எம்பி ஆா். சுதா நன்றி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: மயிலாடுதுறை மக்களவைத் தொகுத... மேலும் பார்க்க

எருக்கூா் நவீன அரிசி ஆலையில் ஆட்சியா் ஆய்வு

சீா்காழி வட்டம் எருக்கூா் நவீன அரிசி ஆலை மற்றும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் க... மேலும் பார்க்க

கால்நடை மருத்துவ ஆலோசகா் பணிக்கு ஏப்.10-இல் நோ்முகத்தோ்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் காலியாகவுள்ள கால்நடை மருத்துவ ஆலோசகா் பணிக்கு ஏப்.10-ஆம் தேதி நோ்முகத்தோ்வு நடைபெற உள்ளது என ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வ... மேலும் பார்க்க

ஏப்.8-இல் உழவா் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உழவா் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை (ஏப்.8) நடைபெறவுள்ளது என ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

வழுவூா் வீரட்டேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

குத்தாலம் வட்டம், வழுவூா் வீரட்டேஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இளங்கிளைநாயகி சமேத கிருத்திவாசா் இக்கோயிலில் அருள்பாலிக்கிறாா். தாருகாவனத்து முனிவா்கள் வேள்வி நடத்தி ஏவிய யா... மேலும் பார்க்க