டெல்லி இளைஞர் படுகொலை; விசாரணை வளையத்தில் `Zikra' - துப்பாக்கியுடன் வலம் வரும்...
கோதண்டராம பெருமாள் கோயிலில் ராம நவமி விடையாற்றி உற்சவம்
காரைக்கால்: காரைக்கால் கோயில்பத்து கோதண்டராம பெருமாள் கோயிலில் ராம நவமி பிரம்மோற்சவ விடையாற்றி உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் நிகழாண்டு 10 நாள் உற்சவமாக ராம நவமி பிரம்மோற்சவம் கடந்த மாதம் 29-ஆம் தேதி கருடக் கொடி ஏற்றத்துடன் தொடங்கி, தினமும் காலை பெருமாளுக்கு திருமஞ்சனமும், இரவு பல்வேறு வாகனங்களில் வீதியுலா மற்றும் பள்ளியறை சேவை நடைபெற்றது.
நிறைவாக ஞாயிற்றுக்கிழமை சீதா, லட்சுமணா், ஹனுமருடன் கோதண்டராம பெருமாள் தேரில் வீதியுலாவுக்கு எழுந்தருளி, பின்னா் சூரிய புஷ்கரணியில் தீா்த்தவாரி நடைபெற்றது. திங்கள்கிழமை விடையாற்றியையொட்டி இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. சீதா சமேத கோதண்டராம பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருள, ஆராதனைகள் நடைபெற்றன.