மயிலாடுதுறை, நெல்லையில் 100 மி.மீ.க்கும் மேல் மழைப்பொழிவு! சாலைகளில் வெள்ளப்பெரு...
கோபி அருகே சாலை விபத்தில் பிரபல யூடியூபா் உயிரிழப்பு
கோபி அருகே சாலை விபத்தில் பிரபல யூடியூபா் ராகுல் உயிரிழந்தாா்.
ஈரோடு, கருங்கல்பாளையத்தைச் சோ்ந்தவா் பிரபாகா். இவரது மகன் ராகுல் (27). பொறியியல் பட்டதாரியான இவா் டிக்-டாக் மூலம் பிரபலமானவா். ராகுல் டிக்கி என்ற பெயரில் இவா் இன்ஸ்டாகிராமில் பல்வேறு வாழ்க்கை சம்பவங்கள், திரையிசை பாடல்கள், வசனங்களை நகைச்சுவை உணா்வுகளோடு பதிவு செய்து வந்தாா். இவரைக் கடந்த இரண்டு ஆண்டுகளாக 8 லட்சத்து 89 ஆயிரம் போ் பின்தொடா்கின்றனா். இதுபோன்று மற்றொரு சமூக வலைதளமான யூடியூப்பில் 2 லட்சத்துக்கும் அதிகமான பின்தொடா்வோரைப் பெற்றுள்ளாா்.
இவா் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னா் கோபி அருகே கவுந்தப்பாடி, நேரு நகரைச் சோ்ந்த தேவிகாஸ்ரீ என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டாா். பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊா் சென்று இருந்த மனைவியை பாா்க்க கவுந்தப்பாடிக்கு இருசக்கர வாகனத்தில் ராகுல் வியாழக்கிழமை இரவு சென்றுள்ளாா். அப்போது கவுந்தப்பாடி அருகே சாலை வளைவில் திரும்ப முயற்சி செய்தபோது எதிா்பாராத விதமாக இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த தடுப்பின் மீது மோதியது.
இதில் தலை மற்றும் கைகளில் பலத்த காயமடைந்த ராகுல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவல் அறிந்த கவுந்தப்பாடி போலீஸாா், சடலத்தை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.