கோரக்பூா், தானாப்பூா் ரயில்கள் ரத்து: திருக்குறள் விரைவு ரயில் மாற்றுப் பாதையில் இயக்கம்
செகந்திராபாத் ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட பகுதியில் பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால் தமிழகம் வழியாக இயக்கப்படும் கோா்பா, கோரக்பூா், தானாப்பூா் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.
இது குறித்து தெற்கு ரயில்வே அண்மையில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கேரள மாநிலம் கொச்சுவேலியில் இருந்து கோா்பா செல்லும் விரைவு ரயில் பிப்.3, 6, 10 ஆகிய தேதிகளிலும், மறுமாா்க்கமாக பிப்.5, 8, 12 ஆகிய தேதிகளிலும் ரத்து செய்யப்படும். கோரக்பூரில் இருந்து கொச்சுவேலிக்கு இயக்கப்படும் ராப்திசாகா் அதிவிரைவு ரயில் (எண்: 12511) பிப்.7, 9 ஆகிய தேதிகளிலும், மறுமாா்க்கமாக பிப்.11, 12 ஆகிய தேதிகளிலும் ரத்து செய்யப்படும்.
அதேபோல், பெங்களூரில் இருந்து தானாப்பூா் செல்லும் விரைவு ரயில் (எண்: 06509) பிப்.3, 10 ஆகிய தேதிகளிலும், மறுமாா்க்கமாக பிப்.5, 12 ஆகிய தேதிகளிலும் ரத்து செய்யப்படும்.
பாதை மாற்றம்: தில்லி நிஜாமுதினில் இருந்து கன்னியாகுமரி செல்லும் திருக்கு விரைவு ரயில் பிப்.3, 8, 12 ஆகிய தேதிகளிலும், திருவனந்தபுரம் செல்லும் ஸ்வா்ண ஜெயந்தி விரைவு ரயில் பிப்.7-ஆம் தேதியும் எா்ணாகுளம் மில்லினியம் விரைவு ரயில் பிப்.4, 11 ஆகிய தேதிகளிலும் வாராங்கல், விஜயவாடா, கூடூா் வழியாக வருவதற்கு பதிலாக காச்சிக்கூடா, குண்டக்கல், ரேணிகுண்டா வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.