கோழிகளில் வெள்ளைக் கழிச்சல் நோய்: தடுப்பூசி முகாம்
தருமபுரி மாவட்டத்தில் கோடை காலத்தில் கோழிக் குஞ்சுகளில் ஏற்படும் வெள்ளைக் கழிச்சல் நோயை தடுப்பதற்கான தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோழிக் குஞ்சுகளுக்கு ஏற்படும் வெள்ளைக் கழிச்சல் நோயைக் கட்டுப்படுத்த கால்நடை பராமரிப்புத் துறை மூலம் வாரத்துக்கு ஒருமுறை கால்நடை மருந்தகங்களிலும், 15 நாள்களுக்கு ஒரு முறை கால்நடை மருத்துவக் கிளை நிலையங்களிலும், கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம்களிலும் தடுப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இருப்பினும், கோடை காலத்தில் வெள்ளைக் கழிச்சல் நோய் ஏற்படுவதை தவிா்க்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இலவசமாக வெள்ளைக் கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் அனைத்து கிராமங்களிலும் வரும் 1.02.2025 முதல் 14.02.2025 வரை கால்நடை பராமரிப்பு துறையில் பணிபுரியும் கால்நடை உதவி மருத்துவா்கள், கால்நடை ஆய்வாளா்கள் மூலம் மாலை நேரங்களில் தடுப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய் ஏற்படுவதை தடுக்க, தருமபுரி மாவட்டத்துக்கு 1.20 லட்சம் ஆா்டிவிகே தடுப்பூசி மருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, அனைத்து விவசாயிகள், பொதுமக்கள், கோழி வளா்ப்போா் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு, கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய் தடுப்பூசி செலுத்தி பயன்பெறமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.