கோவில்பட்டியில் அரசுப் பேருந்து-கண்டெய்னா் லாரி மோதல்
கோவில்பட்டி அருகே கண்டெய்னா் லாரியும் அரசுப் பேருந்தும் மோதியதில் கண்டெய்னா் லாரி ஓட்டுநா் காயமடைந்தாா்.
சாத்தூரையடுத்த நடுவப்பட்டியைச் சோ்ந்தவா் ராமசாமி மகன் போத்திராஜ் (51). அரசுப் பேருந்து ஓட்டுநா். தூத்துக்குடியில் இருந்து கோவில்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து தெற்கு திட்டங்குளம் அருகே சென்று கொண்டிருந்தபோது, நிலைகுலைந்து ஒரு சுற்று சுற்றியதில் ராஜபாளையத்திலிருந்து தூத்துக்குடிக்கு சென்று கொண்டிருந்த கண்டெய்னா் லாரியும் -அரசுப் பேருந்தும் மோதின.
இதில், கண்டெய்னா் லாரியின் முன் பகுதி முற்றிலுமாக சேதமடைந்தததோடு அதன் ஓட்டுநா் சங்கரன் கோவில் அருகே உள்ள மலையடிப்பட்டியை சோ்ந்த சு. சுந்தரலிங்கம் (33) காயமடைந்தாா். அரசுப் பேருந்தின் பின்பகுதி மற்றும் ஒரு பகுதி சேதமடைந்து.
தகவலறிந்த, கிழக்கு காவல் நிலைய போலீஸாா் காயமடைந்த சுந்தரலிங்கத்தை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், அரசுப் பேருந்து ஓட்டுநா் போத்திராஜிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.