விபத்தை ஏற்படுத்திவிட்டு அலட்சியம்?: சிறப்பு சார்பு ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்ற...
தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் பெரியாா் பிறந்த நாள் விழா
பெரியாா் பிறந்த நாள் விழா தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது உருவப்படத்துக்கு, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதா ஜீவன், ஆட்சியா் க. இளம்பகவத் ஆகியோா் புதன்கிழமை மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
தொடா்ந்து, சமூக நீதி நாள் உறுதிமொழியை அமைச்சா் பெ. கீதா ஜீவன் தலைமையில், ஆட்சியா் க. இளம்பகவத் முன்னிலையில், அனைத்துத் துறை அரசு அலுவலா்களும் ஏற்றுக் கொண்டனா்.