வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி
நாசரேத்தில் அரிவாளைக் காட்டி மிரட்டியதாக 2 போ் கைது
நாசரேத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக அரிவாள் காட்டி மிரட்டியதாக 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
நாசரேத்-அம்பாள் நகரைச் சோ்ந்த இசக்கிமுத்து மகன் சற்குணமுத்து ( 40), நாசரேத் வெள்ளரிக்காயூரணியைச் சோ்ந்த மருதநாயகம் மகன் சித்திரைச் செல்வன் ஆகிய 2 பேரும் நாசரேத் காமராஜா் பேருந்து நிலையம் அருகே பொதுமக்களை அரிவாளைக் காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.
நாசரேத் போலீஸாா் சென்று சற்குணமுத்து, சித்திரைச் செல்வன் ஆகிய 2 பேரையும் கைது செய்து, அரிவாளை பறிமுதல் செய்தனா்.